பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கவியரசர் முடியரசன் படைப்புகள் ‘என்கவியில் என்பேச்சில் குறைதேடி எழுதியதால் நாடி வந்த என்வருவாய் நன்மானம் இழந்தே'னென் றொருவழக்குத் தொடர்ந்தா ராகத் தென்மொழியும் ஆங்கிலமுந் தேர்ந்துணர்ந்த வழக்குரைஞர் யாரோ என்று நன்மணியார் தஞ்சார்பில் வழக்காடும் நல்லவரைத் தேடி வந்தார். | நற்றமிழில் வல்லவராய் வழக்குரைக்கும் நாவலராய்ச் சிங்கம் என்று பற்றுடனே சொலநிற்கும் பசுமலையார் பாரதியார் இவர்க்கு வந்தார்: சொற்றவறும் வீமகவி இடுவழக்கில் தோற்றோடச் செய்து விட்டார்: அற்றைமுதல் இவ்விருவர் நண்பானார் அந்நண்பர் பகைவரானார். | "இருவர்-பண்டிதமணியும் பாரதியும், அந்நண்பர்-வீமகவி.