பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'திண்ணையில் அமைந்த பள்ளி திருத்திடும் ஆசாற் சார்ந்தங்கு எண்ணுடன் எழுத்தும் கற்கும் இளையநற் பருவத் தாரைக் கண்ணெனும் வணிக நோக்கில் கலத்தினிற் செலவிடுத்தல் பண்ணுயர் செட்டி நாட்டுப் பழங்குடி வழக்க மாகும்’ (2:10) அதற்கேற்பப்பண்டித மணியாரும் இலங்கைக்கு அனுப்பப் பட்டார். அங்கே அவர் துணிக்கடை வாணிகத்தில் அமர்த்தப் பட்டார். அவர் புத்தகம் எழுதுங்கையால், புதுத்துணி முடித்துத் தந்தார். கவிஞர் கருத்துப்படி, பிற்காலத்தில் பத்துடன் சங்கத் தொகையைச் சொல்வார், பணத்தொகை விலையைச் சொல்லி வாழ்ந்து வந்தார். துணிநயத்தை விரல்கள் தொட்டுப் பார்த்தாலும் சொல்நயத்திலேயே சிந்தை தோய்ந்து நின்றதாம். நகரத்தார்கள் முயற்சிமிக்கவர்கள். ஒன்று பெற்றாலும் அதனையே தம் முயற்சியால் பத்தாகப் பெருக்கிக்கொள்ள வல்ல வர்கள். மற்றவர்கள் பத்தைப் பெற்றாலும் ஒன்றோ இரண்டோதான் மீத்துவைப்பர். நகரத்தார்க்கும் பிறர்க்கும் இஃதொரு அடிப்படை வேறுபாடாகும். இத் திறமையைக் கதிரேசர் கல்வியிற் காட்டித்தம் புலமையைப் பெருக்கிக் கொண்டார் என்பது கவிஞரின் மதிப்பீடு. "பெற்றிடும் ஒன்றைக் கொண்டே பத்தெனப் பெருக்கிக் காட்டக் கற்றவர் குடியில் வந்த கதிரேசச் செம்மல் - (2:41) என்று ஒரு சமுதாயச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஈட்டுதல், சேமித்தல், வழங்குதல் என்பன அண்ணாமலை அரசர் கண்ட குறிக்கோள்கள். இது செட்டிநாட்டவர் அனைவரின் குறிக்கோள்களே எனப் பொதுவகையில் கூறலாம். இவற்றை நகரத்தார் பண்பில் தோய்ந்த நலன்கள் எனவும் சுட்டலாம். ஒருசாதி, ஒருசமூகம் என்ற உணர்வு குறுகியதே. ஆயின் அவ்வுணர்வே நாட்டுநலனும் மொழிநலனுமாகிய பொதுநலனை வளர்க்கப் பயன்படுமாயின் அது சாலச் சிறந்ததன்றோ? நகரத்தார்கள் என்றும் நகரத்தார்க்குமட்டுமே என நலன்நாடி உழைத்ததில்லை. உண்மை