பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விழும்நிலை எய்தினர் வெருவிய தேசிகர்
தாவி யெழுந்து தாங்கி அணைத்தனர்
120
பாவில் உறுநயம் பயின்றிடும் நாவால்
‘எளியேம் தவறுவ தியற்கை அதுபோல்
அளியீர் எம்மை அணைத்துத் தாங்கலும்
இயல்பே யா’மென ஒருபொருள் தருமொழி
இயம்பினர் புலவர் எழுந்தது நகையே
125
பாவால் ஒருநூல் பாடி ஒருவர்
தேவாரம் என்றொரு தெரிபெயர் சூட்டிப்
பண்டித மணியைக் கண்டொரு பாயிரம்
பெர்றிடும் ஆவலால் உற்றனர் இவர்பால்
கர்ற கல்வியில் முற்றுதல் இல்லா
130
மற்றவர் தமக்கு மதிப்புரை நல்க
விழைதல் இலரால் விடையிது கூறினர்;
புதிய தேவாரப் புத்தகந் தன்னைப்
பழையஓர் அறையிற் படுத்துதல் வேண்டும்
முதலிற் கறையான் சுவைத்து முடிக்க
135
எஞ்சிய பகுதியே இனியதே வாரம்
பழந்தே வாரம் வந்த முறையிது
அந்த முறையால் வந்தால் நமது
பாடலும் பெருமைப் பாடுடைத் தாகும்
இவ்வணம் செய்தபின் எஞ்சிய பகுதியைக்
140
கொணரின் பாயிராங் கொடுக்கத் தடையிலை
என்று மொழிதலும் ஏகிய அவர்தாம்
என்றும் வந்திலர் இன்குறிப் புணர்ந்தே.