பக்கம்:எச்சில் இரவு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


"நானா, குடித்தேனா? என் நண்பர்களில் பலர் குடிப்பதுண்டு. அவர்கள் குடிக்கும்போது நான் அருகில் இருந்ததுமுண்டு. என்னைக் குடிக்கும்படி நண்பர்களும் வற்புறுத்தியதுண்டு. தனக்குப் பிடிக்காத தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை, மயிலை மகாவித்வான் சண்முகம் பிள்ளை முதலிய பெரிய வித்துவான்கள் காலமானபோது, பலர் வற்புறுத்தியும் அவர்கள்மீது இரங்கற்பாக்கள் பாட சதாவதானம் நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் எப்படி மறுத் தாரோ அதைப் போலவே எனக்குப் பிடிக்காத மதுவை நண்பர்கள் குடியென்று வற்புறுத்தியும் நான் குடித்த தில்லை. நான் மதத்தை மட்டுமல்ல; மதுவையும் தள்ளி வைத்திருக்கிறேன்" என்றான் அவன்.

"இவற்றை மட்டுமல்ல, என்னையும் சிலசமயம் தள்ளி வைக்கிறீர்கள்" என்றாள் அவள்.

"சீன தேசத்து ஞானி கன்பூஷி‌பஸ் என்பவன், படிக்கவும், பொதுவான காரியங்களைக் கவனிக்கவும் தனக்குப் போதுமான நேரம் வேண்டுமெனக் கருதித் தன் மனைவியை அவன் நான்குமுறை தள்ளிவைத் தானும். நான் உன்னை மாதம் ஒருமுறை தானே தள்ளி வைக்கிறேன்." என்றான் அவன்.

மங்கை ஒருத்தியை இயற்கை எதற்காக மாதம் ஒருமுறை தள்ளிவைக்கிறது என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அவள் சிரித்தாள்.

அவன் அவளைக் கண்களால் அழைத்தான்.

அவள் அவனைக் கண்களால் இழுத்தாள்.

அழைத்தவன், இழுத்தவளின் அருகில் சென்றான்

அன்றாடம் இனிப்பவளே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/105&oldid=1314381" இலிருந்து மீள்விக்கப்பட்டது