பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

145


உழைப்பு ஊரழிக்கும் காரியமாகாது தடுக்கவும், விஞ்ஞானம் விபரீதத்தைப் பொழியாது நன்மைகள் பயக்கக்கூடியதாக அமையவும் வழி பிறக்கும்.

போர் என்றால் ரத்தம் என்று களத்திலே உள்ளவர் கூறுவர். நாட்டிலே உள்ள ஏழைகள் போர் என்றால் அளவு அரிசியும் வேறு பல அவதியும் என்று கூறுவர். ஆனால் முதலாளிக்கோ லட்சக்கணக்கில் லாபம். நம்பிக்கை ஒளி, தொழிலுக்கு வளர்ச்சி.

நல்கதி நாடுவோரே!

கோடி கோடியாக லாபம் குவிந்தாலும் முதலாளிமார்கள் குமுறும் தொழிலாளியிடம் குளிர்ந்த முகத்துடன் நடக்க முன் வருவதில்லை. கோகிலவாணிகளுக்குக் கொட் டித்தரவும், கோலாகலமான வாழ்க்கை நடத்தவும், கோயில் கும்பாபிஷேக செலவு செய்யவும் மனம் வருகிறதே தவிர தொழிலாளிகளுக்கு போனஸ் தருவதற்குக்கூட மனம் சுலபத்தில் இடந்தருவதில்லை. ஏழையின் வயிற்றிலடித்து திரட்டிய பணத்தை உருட்டி வைத்துக் கொண்டிருக்கும் செல்வந்தர்கள் பணத்தை பகுத்தறிவுக்கோ பயன்தரும் பணிக்கோ செலவிடும் திருந்திய மனம் உடையவர்களல்ல. போக போக்கியத்துக்கும் போகிற கதி நல்லதாக இருக்கவேண்டுமே என்பதற்காக மட்டுமே பணத்தைச் செலவிடுவார்கள்.

கூட்டணி தேவை

தொழிலாளியின் வாழ்வு முதலாளியின் நாக்கு நுனியில் இருந்து வந்தது. வேலையில்லை என்றால் இல்லைதான். 'ஐயா சொன்னால் சொன்னதுதான் !' இந்த முறை சங்க ரீதியாக

எ--10