பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

领 எதிர்காலத் தமிழ்க்கவிதை * 28 பாரதிதாசன் காதல் வாழ்வு என்னும் பொருளில் தம் இரண்டாம் தொகுதியில் சேர்த்துள்ள பகுதியும் அமைதி: என்னும் நூலும் வசன கவிதை வகையைச் சார்ந்தவை. கண்ணதாசன் வசன கவிதைகள் எழுதுவதில் நிகரற்றவர் என்பதில் தடையில்லை. அந்தக் காலத்தில் 'போய் வருகிறேன்" என்று அரசியல் பின்புலத்தில் எழுதிய வசன கவிதை இன்றும் என் மனத்தில் நிற்கிறது. அவரது "ஞானமலர்களும் புஷ்ப மாலிகாவும் பாராட்டுக்குரியன. என்னைப் பொறுத்தவரை கண்ணதாசனை அவரது வசன கவிதைகள் மூலமே ஒரு நல்ல கவிஞர் என்று இனங்கண்டு கொள்ள முடிந்தது. . காமராசனின் 'கறுப்பு மலர்களில் உள்ள விலை மகளிர். பிச்சைக்காரி போன்ற சில வசன கவிதைகள் பிற மொழி களுக்கும் பெருமை சேர்க்கத்தக்கன. குலமகளிரைப் பற்றி வருணிக்கும்போது அவர்களை விலைமகளிராக்கிவிடும் கவிஞர்களிடையே காமராசன் விலைமகளிரை நம் உள்ளம் உருகப் பேச வைக்கிறார்: நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் ஆடை வாங்குவதற்காக இந்த ஒரு வரி போதும், வசன கவிதையின் வளத்தைக் காட்ட, r எனது கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்னும் நூலும் வசன கவிதை வகையைச் சார்ந்ததே. கட்டற்ற கவிதை, வசன கவிதை - இந்த இரண்டையும் தமிழ்க் கவிதையின் உட்பிரிவுகளாக ஏற்கலாம். புதுக் கவிதைக்காரர்கள் எழுதும் கவிதைகளை இப்பிரிவுகளுள் அடக்கலாம். இதைவிட்டுப் புதுக்கவிதை' என்று அவர்கள் தனியாக ஒரு பெயர் கொடுக்கும்போதுதான் குழப்பம் ஏற்படுகிறது. புதுக்கவிதை என்பது இந்த