பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன்முடி “யாரைப் பார்க்கப்
போகின்றீர்?” என்று கேட்டான்.

“பொன்முடி‘ உனக்கும் அந்தப்
பூங்கோதை தனக்கும் மெய்யாய்
    
ஒன்றும் சம்பந்த மில்லை
என்று போய் உரைக்க எண்ணம்“

என்று பண்டாரம் சொன்னான்.
பொன்முடி இடை மறித்தே,

பண்டாரம் அறியத் தக்க
பக்குவம் வெகுவாய்க் கூறிக்,

கண்டிடப் பூங்கோதைபால்
காலையில் போக எண்ணங்
    
கொண்டிருப்பதையுங் கூறிப்,
பிறரிடம் கூறி விட்டால்

உண்டாகும் தீமை கூறி
உணர்த்தினான் ! போனான் ஆண்டி.

31