பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என் அண்ணாமலை நகர் வாழ்க்கை மொழிப்பெரும் புலவர் ஞா. தேவநேயப்பாவாணர் 1. முயற்சிப் படலம், உயர்நிலைப் பள்ளிகளும் கல்லூரிகளுமான கல்வி நிலையங்களில் கற்பிக்கப்பெறும் பாடங்களுள், தமிழ் ஒன்றே அடி முதல் முடிவரை தருக்கத்திற்கும் முரண் பாட்டிற்கும் இடமானதாம். இது ஆரியத்தினால் தமிழுக்கு விளைந்த தீங்குகளுள் ஒன்று. தமிழ் நெடுங் கணக்கே ஆரியத்தினின்று திரிந்ததாகக் கால்டுவெல் கண்' காணியாரும் கூறிவிட்டார். இஃது. ஏற்கெனவே வெறு வாயை மென்று கொண்டிருந்த வடமொழி வெறியர்க்கும் அவரடியார்க்கும் அவல் கிடைத்தது போலாயிற்று. கால்டுவெலார் நுண்மாண் நுழைமதியாரும் நிறைகோல் நடுநிலையாருமாயிருந்தாரேனும், அவர் காலத்திற் கழக (சங்க) நூல் வெளிப்பாடும் குமரிக் கண்ட வரலாறும் மறைமலையடிகள் போலும் புலவரும் தனித்தமிழ் ஆராய்ச்சியும் இன்மையால், தமிழின் உண்மைத் தன்மையை அவர்காண இயலாது போயிற்று. இதனால் அவர் பெயருக்கு எள்ளளவும் இழுக்கில்லையென்க. இயல்பான எளிய தமிழெழுத்துக்களும் ஆரியவல் லெழுத்துக்களின் மெலிவென்றும், தூய தென்றமிழ்ச் சொற்களும் வட சொற்களின் திரிபென்றும், வலம்புரி முத்திற் புலஞ்சிறந்த தலைத்தமிழ் நூல்களும் சமற்கிருத நூல்களின் மொழிபெயர்ப்பென்றும், செந்தமிழ்க்கே சிறப் பான கலைகளும் அறிவியல்களும், இலக்கண வமைதியும்