பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மைக்கு மாறாகத் தமிழை எத்துணையோ ஆழ்த்தியும் தாழ்த்தியும் கூறியுள்ளனர். ஆயினும், அவரைத் தடுக் கவோ விடுக்கவோ எத்தமிழ்ப் பேராசிரியர்க்கும் எள்ளளவும் உரமில்லாது போயிற்று. முப்பதாண்டுகளாக இரவும் பகலும் அரும்பாடுபட்டுத் தமிழாராய்ந்து, உள்ளதை உள்ளவாறு கூறிய எனக்கோ, இல்வாழ்க் கைக்கும் இடமில்லாதபடி தமிழரே, அதுவும் தமிழ்ப் பேராசிரியரே, வலுத்த முட்டுக்கட்டையிட்டனர். கால்டுவெலும் மாக்கசுமுல்லரும் செசுப்பர்சனும் இத்த கைய கட்டுப்பாட்டிற்கும் முட்டுப்பாட்டிற்கும் ஆளா யிருந்திருப்பின், அவர் மனநிலை எங்ஙனமிருந்திருக்கும் என்பதை எண்ணிக் காண்க. ஆங்கிலக் கல்வியும் அறிவியலாராய்ச்சியும் மிக்க இவ்விருபதாம் நூற்றாண்டிலும், பல்கலைக் கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியன்மார் தமிழைக் காட்டிக் கொடுத்துப் பட்டமும் பதவியும் பெயரும் புகழும் பாராட் டும் பரிசும் பெறுவாராயின், பிரா மணர் நிலத்தேவ ரென்றும் அவர் முன்னோர் மொழி தேவமொழியென்றும் முற்றும் நம்பப்பட்டிருந்த பண்டைக்காலத்தில், தமிழ் நிலையும் தமிழன் நிலையும் தன்மானத் தமிழ்ப் புலவன் நிலையும் எத்துணைத் தாழ்ந்திருத்தல் வேண்டுமென்பதை, கடுகள் வேனும் பகுத்தறிவுள்ளார் உய்த்துணர்ந்து கொள்க. பர். சட்டர்சி தமிழை நேர்வழியிற் கல்லாது, தமிழைப் பிறழவுணர்ந்த அல்லது திரித்துக் கூறுகின்ற பிராமண வாசிரியர் எழுதிய ஆங்கில நூல் வாயிலாய்க் கற்ற வங்காளியர். அவர் தமிழறிவு எத்தகைய தென்பது அடுத்த படலத்தில் விளக்கப் பெறும். பர். கத்தரே ஒரு சமற்கிருத வெறியரான கொங்குனிப் பிராமணர். தமிழ்ப் பெருமைச் சற்றும் அறியாதவர்,