பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

132 கூட்டம் முடிந்தபின், பர். சட்டர்சி புன்னகையுடன், "திருவாளர் தேவநேயரீர்! நீர் அந்தச் சீட்டைக் காட்ட வேண்டும்” என்று விளையாட்டாகவும் வினையாகவும் சொன்னார். "நான் சீட்டுக் காட்டமுடியாது; ஆயின், சீட்டு வாங்கியதற்குச் சான்று காட்டமுடியும்” என்று செப்பினேன். அவர் உள்ளத்திற் கள்ளமற்றவர் தான். ஆயின், தமிழைப்பற்றி அவருக்குத் தெள்ளிய அறி வில்லை. இதற்குத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரே பொறுப்பாளர். பர் சேதுவோ, 'இனிமேல் அந்தப் புகை வண்டிச் சீட்டுவமையை எங்கும் சொல்லாதீர்கள்' என்று நல்லது சொல்வதுபோல் எச்சரித்தார். பர். கத்தரே என் னைப் பற்றிய கருத்தை உள்ளத்தில் மறைவாய் வைத்துக் கொண்டார். 1 அன்று எற்பாடு (சாயுங்காலம்), பர். சட்டர்சியைச் சிறப்பிக்க ஒரு சிற்றுண்டி விருந்து நடந்தது. அதில் அவரைப் பாராட்டிப் பேசிய பர். சேது, அவர் தம் பெயரை 'நன்னெறி முருகன்' என்று குறிப்பிடுவர் என் றும், தமிழ்ப்பற்று நிரம்பியவர் என்றும், சிறப்பாய்க் குறிப் பிட்டார். அதன் உட்குறிப்பு மொழி நூல் பற்றிய அவரது நடுநிலை முடிபே கொள்ளத்தக்கதென்றும், தமிழ் வெறி யால் தேவநேயன் கூறுவது தள்ளத்தக்கதென்பதுமே. 'தமிழ் கெடினும் கெடுக; தேவநேயன் பெயர் ஓங்கக் கூடா'தென்பதே அவர் குறிக்கோள். பர். சட்டர்சிக்குத் தமிழ் தெரியாது. அதிற் பேசவோ எழுதவோ அவருக்கு இயலாது. தமிழைப்பற்றி ஆங்கில நூல் வாயிலாகவே கற்றவர். சுநீதி குமார் சட்டர்சி என் னும் தம் பெயரின் முன்னிரு சொற்களை மட்டும் நன்னெறி முருகன் என்று மொழிபெயர்த்து, அவற்றைத் தமிழெழுத் திற் குறிக்கக் கற்றிருக்கின்றார். நெறி என்பது வழி அல்லது விதி. நீதியைக் குறிக்க அதினுஞ் சிறந்த