பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

37 ததைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து விட்டேன். முதுபழங் காலத்துத் தமிழக் குமுகாய (சமுதாய)ச் சூழ் வெளி, இராமாயணம் மகாபாரதம் போன்றவற்றாலும், புராணங் களாலும், செந்திறச் சமற்கிருத இலக்கியத்தாலும், வட இந்திய ஆரிய மொழிகளிற் போன்றே தென்னிந்தியத் திராவிட மொழிகளிலுமிருக்கும் இடைக்கால இலக்கியங் களாலும், காட்டப் பெறும் சூழ்வெளியினின்றும் வேறு பட்ட சில கூறுகளைக் காட்டுவதாய்த் தோன்றிற்று. தமிழிலக்கியத்தில் வாழ்க்கையை அடுக்கும் வழியும், அதன் மறநிலைச் சூழ்வெளியும், இந்திய இலக்கியத் துறைக் களத்தில் ஒரு தனிப்பட்ட நிலைமையைக் காட் டின. களவென்றும் கற்பென்றும் இருபெருந் தொகுதி களாக அல்லது வகுப்பாகக் காதலை வகுத்த பழந்தமிழ் வகையீடு, ஆரிய இலக்கியம் என்பதின் அல்லது சமற் கிருதத்தின் கண்டிப்பான மரபியற் கருத்திற்கு மாறாகப் போவதாய்த் தோன்றிற்று. (களவென்பது வளர்ச்சி யடைந்த இளந்தையரிடைப்பட்ட ஒருவகைக் கட்டுப்பா டற்ற காதலைக் குறிக்கும். இது, நன்று திருந்தின குமுகா யத்திற்போல் வளர்நிலையர் அல்லது இளந்தையரிடைப் பட்ட உறவியல்கள் சிறந்த முறையில் மரபியலொழுங்கு படுத்தப் பெறாத முந்தியல் மாந்தரினத்துள் மிக இயற்கை யாகக் காணப்படுவதாகும். கற்பென்பது, சட்ட முறைத் திருமணத்தின் பிற்பட்ட ஒழுங்கான மரபியற் காதலைக் குறிக்கும். இஃது இருபாலிடைப்பட்ட உறவியல்களுள் முதன்மை பெற்றதாகும்) மீண்டும், தொல்காப்பிய நெறி மொழிகட்கு முலமான முந்து தமிழ் நூல்களில் காதல் விரிவாகக் கூறப்பட்டவகை, முற்றிலும் புதுமையான தாகவும் அனைத்திந்தியச் சமற்கிருத அடிப்படைச் சார்பற்றதாகவும், தோன்றிற்று. இங்ஙனம், வேறுபட்ட வாழ்க்கைக் கூறுகளும் பொருளியற்பண்பாட்டு நிலைக் களங்களும் காதலுணர்ச்சி பயிற்சிகளும் குறிஞ்சி,