பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 | முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை களின் விரிவான உள்ளிடை யுறவும், உண்மையில் அவையிருக்கிறபடியே, அதாவது பழந் தமிழிலக்கியத் தின் ஒரு புது முதன்மையாகக் காட்சியளித்தன. இவை யெல்லாம் காட்டும் கலைவனப்பும் புதுமையும் எனக்கு மிகுந்த உள்ளக் கிளர்ச்சியூட்டின. அதனால், இவ்வகை யால் 1500 முதல் 2000 வரைப்பட்ட ஆண்டுகட்கு முந்திய தமிழகத்தை இந்தியாவின் பிற பாகங்களினின் றும் சிறப்பாக வேறுபடுத்திக் காட்டுவதொன்றுண்டென் னும் நிலைமையை ஒப்புக்கொள்ள வேண்டுமென்று, என் உள்ளத்தில் ஓர் ஆர்வம் எழுந்தது. பண்டைத் தமிழிலக் கியத்திற் சமற்கிருதச் சொற்களும் கருத்துக்களும் மிகக் குறைவென்று பழந்தமிழ் ஆர்வலர் சிலராலும் மிகத் திட்டவட்டமாய்ச் சொல்லப்பட்டது. இவ்விரு செய்தி களும், (கழக இலக்கியத்திற் போன்றே தமிழிலக்கிய மரபு முற்றும் சமற்கிருதச் சார்பற்றதென நிலை நாட்டுவ வாய்த் தோன்றின. இது, தமிழிலக்கியப் பண்பாடுகளின் புது முதன்மையிலும் ஒப்பியல் முன்மையிலும் எளிதாக உணரக்கூடியதும் முறைப்பட்டதுமான பெருமை கொள் வதற்கு உணர்வெழுப்பும் தேற்றமான ஊற்றாக உண்மை யில் ஆகிவிட்டது; அதனால், பிரிவுணர்ச்சியை மிகு தியும் தூண்டிவிட்டது. இவ்வுணர்ச்சி, இற்றை நாளில், குமுகாயம், அரசியல், சமயம் ஆகிய பிற துறைகளிலும் ஊக்கப் பெறுகின்றது. இதுவே ஒரு வெளியார்க்குத் தோன்றும் கருத்து. "தமிழ் இங்ஙனமிருப்பினும், ஏறத்தாழ உடன் அடுத்தே, கழக நூல்களை முன்னினும் ஆழ்ந்து கற்று [ஆனால் ஆங்கிலமொழி பெயர்ப்பு வாயிலாகத்தான்) நான் அயலானேயல்லன் என்பதைக் கண்டேன். இன் புறுத்துவனவும் மிகத் திட்டவட்டமாய்ப் புதுமுதலானவு