பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அச்சன் அச்சி என்று திரியுமென்றும்; தகரம் சகரமாகத் தமிழில் திரிவது இயல்பென்றும்; அப்பன் அம்மை என் பன கண்ணப்பன் கண்ணம்மை என்பவற்றில் வருவது போல், அத்தன் அத்தி; அச்சன் அச்சி, என்னும் தந்தை தாய் பெயரும் ஆண்பால் பெண்பாலீறாய் வருமென்றும்; வண்ணாத்தி தட்டாத்தி என்பவற்றில் அத்தி என்பதும், மருத்துவச்சி, வேட்டுவச்சி என்பவற்றில் அச்சி என்பதும், பெண்பாலீறென்றும்; கூறிய பொழுது, இது போல் தகரம் சகரமாகத்திரியும் வேறொரு சொல் சொல் என்றார் பர். சட்டர்சி. நான், நத்து நச்சு என்னும் திரிபைச் சென்னைப் ப.க, க. தமிழ் அகர முதலி யில் எடுத்துக் காட்டினேன். அவர் ஒரு மரம் தோப்பாகாது" ("One swallow cannot make a summer") என்றார். நான் இன்னுமுளதென்று காட்டப் புகுமுன் எனக்கு நேரமாயிற்று. எல்லாவற்றையும் பற்றி விரிவாக யெழுதி எனக்கு நேரே காளிக்கோட்டத்திற்கனுப்பு என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அடுத்து, தெலுங்கிற்குத் திரு. மகாதேவ (சாத் திரியா) ரும் (எம். ஏ.), கன்னடத்திற்குத் திரு. பதுமநாப னும் (எம் ஏ.) விரிவுரையாளராக அமர்த்தப் பெற்றனர். துறை மாற்றுப் படலம் பர். சட்டர்சி, என் கருத்துவேறுபாட்டிற்கு விரிவாகச் சான்று காட்டி வரைந்தனுப்ப வேண்டுமென்று சொல்லி விட்டுச் சென்ற ரேனும், தமிழர் கிரேக்க நாட்டுப் பாங்கரிலிருந்து வந்தவபரன்றும், தமிழ நாகரிகம் பன்னா கரிகக் கலவை யென்றும், திண்ணிய முற்கோளுடைய வராதலின். எத்துணைச் சான்றுகாட்டினும் என் கொள் கையை ஏற்கும் நடு நிலை அவர்க்கில்லையென்பது,