பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

55 இது நிற்றல் இருத்தல் கிடத்தல் என்னும் முந்நிலையிலும் நிகழும். வினபற்றி எனக்கு எல்லா நாளும் வேலை நாள், விழைவு பற்றி எனக்கு எல்லா நாளும் விடுமுறை நாள். மொழி நூலின் ஆங்கிலப் பெயரும் (Philology) விழைவு நூல் என்னும் பொருளதே, ஐந்தாம் ஆண்டிறுதியில், துணைக்கண்காணகரைக் கண்டு, (அதன்மேலும்) ஓராண்டு பொறுக்க வேண்டு மென்றும், அதற்குள் என் சொற்றொகுப்பை முடித்துத் தந்துவிடுவேனென்றும், அதற்குமேல் எனக்கு வேலை வேண்டியதில்லையென்றும் சொன்னேன். அவர்களும் இசைந்தார்கள். மகிழ்ந்திருந்தேன். ஆயின், 6-ஆம் கல்வியாண்டுத் தொடக்கத்தில், நான் எதிர்பார்த்ததற்கு முற்றும் மாறாகக் கண்காணகர் மாறினார்; புதிதாய் வந்தவர்க்குத் தமிழ்ப் பற்றுச் சிறிது மில்லை. பேராசிரியன்மாரின் பெருமையுணரும் திறமு மில்லை. தமிழ்ப் பகைவரும் தர் நலக்காரரும் கொண் டான்மாருங்கூடித் தமிழுக்குக் கெடும்பு செய்துவிட்டனர். திடுமென்று, எனக்கு வேலை நீங்கினதாக ஓலை வந்தது. மேற்கொண்டு ஓராண்டு வேலையை நீட்டிக்கும்படி கர ணியங்காட்டி வேண்டினேன்; நீட்டித்திலர். இலக் கணப் புலமையில்லாத பர். சேதுவின் திட்டமே இறுதி யில் மேற்கொண்டது. ம் செத்துங் கொடுத்தான் சீதக்காதி ப செத்துங் கெடுத்தார் சேதுப் புலவர். "ஆண்டி எப்பொழுது சாவான், மடம் எப்பொழுது ஒழியும் என்று என் பதவிக்கும் உறையுட்கும் நீண்ட நாட் காத்திருந்தவரும் உண்டு. முறைப்படி எனக்கு மும்மாத அறிவிப்புக் கொடுத்தல் வேண்டும். அதையுங் கொடுத்திலர். ஆயினும் பல்கலைக் கழக உறையுளில் மேற்கொண்டு மும்மாதம் குடியிருக்க இடந் தந்தனர்.