பக்கம்:எழில் உதயம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 எழில் உதயம்

"அரவின் அமளியின் அகில பண்மணி

அடைய மரகதம் ஆன ஒர் இரவி வெயில் இலன்; மதியும் நிலவிலன்;

இறைவி ஒளிவெளி எங்குமே” என்று தேவியின் மரகதச் சோதியைத் தக்கயாகப் பரணி (1.36) வருணிக்கிறது.

"பச்சை எறிக்கும் ப்ரைபயன்', 'தெரிவரும் சுத்தப் பச்சை நிறப்பெண்” என்பன திருப்புகழ்.

பச்சை நிறமுடைமையின் அம்பிகைக்குச் சியாமளா என்ற திருநாமம் உண்டாயிற்று.

அநாஹத சக்கரத்தில் பன்னிரண்டு இதழ்களையுடைய தாமரையில் இரண்டு முகங்களுடன் இருக்கும் ராகிணியின் நிறம் பச்சை ச்யாமாபா என்பது அவளுக்குரிய நிறத்தைப் புலப்படுத்தும் திருநாமம். அந்தக் கோலத்தை எண்ணியது என்றும் சொல்லலாம்.

பச்சை நிறத்தைச் சொன்னமையின் அந்நிறமுடைய கொடியைப் போன்றவள் என்று கூறினர். - -

மங்கலம் மங்காதவளாகவும், செங்கலசம் போன்ற நகிலும் வளைகளையுடைய கைகளும் உடையவளாகவும், மலைமகளாகவும், சகல கலா மயிலாகவும், சிவபெருமா னுடைய ஒரு பக்கத்தை ஆளுபவளாகவும் இருக்கும் தேவி, பிங்கலை முதலிய ஐந்து வண்ணமுடையவளாக விளங்கு கிருள் என்று வாக்கிய முடிவு செய்து கொள்ள வேண்டும்.

  • ஈசுவரியுடைய திருமேனிச் சோதிப் பசுமையாலே, தான் எழுந்தருளியிருந்த நாகராசா படம் ஆயிரத்திலும் உள்ளவான ஆயிரம் விற்பிடி மாணிக்கங்களும் தம் சிவப்புக் கெட்டு மரகத ரத்தினடிாயின. இனி மற்றுரைப்பது என்? ஒப்பற்ற ஆதித்தனும் சோதியிலன்; சந்திரனும் அவ்வண்ணமே; உலகம் அடங்கத் தேவியுடைய சோதியே எங்கும் பிரகாசித்தது' என்பது இதன் பழைய உரை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/202&oldid=546357" இலிருந்து மீள்விக்கப்பட்டது