பக்கம்:எழில் விருத்தம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம்

31

3. கோட்டை

சீர்நிலவும் திருமுகத்தான்
    திருநிலவும் மணிமார்பன்
             திண்டோள் முல்லைத்
தார்நிலவும் தமிழ்மன்னன்
    தன்னாட்டை அரசாண்ட
             தகைமை செப்பிக்
கார்நிலயும் மலையுச்சி
    கண்கவரும் பாழடைந்த
             கருங்கற் கோட்டை
கூர்நிலவும் வேல்துணியை
     மறத்தோளைக் குறுநிலத்தைக்
             கூறா நிற்கும் !........................................1