பக்கம்:எழில் விருத்தம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம்

37

4. மாலை

அங்கும் இங்குமாய்ச் சிதறிய வெண்முகில்
    அடிக்கடி ஒளிமாறப்
பொங்கு செங்கடல் நீள்மலை ஒப்பவே
    புத்தெழில் அமுதூட்டித் -
திங்கள் நாணியே சிரித்தெழ ஊர்ப்பொதுத்
    தெருவெலாம் விளக்கேற்ற மங்கு
செங்கதிர் தாமிரத் தட்டென .
     மயக்கிடு மருண்மாலை!............................................ 1

பூத்த தாமரை வானிடைப் போய்விழு
     பொற்கதிர்ப் பொலிவோடு
மூத்த தாமுயிர் முன்நகு அல்லியின்
     முகத்தினில் விழிக்காமல்
போர்த்து வோம்முகம் என இதழ்ப் போர்வையால்
     பொலிமுக விழிபொத்தப்
பார்த்த பேடைகள் ஆணினை விளித்திடும்
     படுகதிர் சாய்மாலை !................................................ 2