பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௮௮

ஒப்பியன் மொழி நூல்

ஆரிய மயமாவதை அல்லது மறைந்து போவதைப் பண்டிதர் கிரையர்சன் 1906 ஆம் ஆண்டே தமது 'இந்திய மொழிக் கணக்கீடு' என்னும் நூலிற் குறித்துள்ளார்.

(vii) வட இந்திய மொழிகளில் திராவிட அடையாளம்.

ஆரியர் வருமுன் வட இந்தியாவில் வழங்கிய திராவிட மொழிகள், அவர் வந்த பின் ஆரியத்தொடு கலந்துபோனமையால், ஆரியத்திற்கு மாறான பலதிராவிட அமைதிகள் இன்றும் வட நாட்டு மொழிகளிலுள்ளன. அவையாவன:—

(1) பிரிக்கப்படும் ஈற்றுருபால் வேற்றுமையுணர்த்தல்.
(2) ஈரெண்ணிற்கும் வேற்றுமையுரு பொன்றாயிருத்தல்.
(3) முன்னிலையை உளப்படுத்துவதும் உளப்படுத்தாததுமான இரு தன்மைப்பன்மைப் பெயர்கள்.
(4) முன்னொட்டுக்குப் பதிலாகப் பின்னொட்டு வழங்கல்.
(5) வினையெச்சத்தாற் காலம் அமைதல்.
(6) தழுவுஞ் சொற்றொடர் தழுவப்படுஞ் சொற்றொடர்க்கு முன்னிற்றல்.
(7) தழுவுஞ்சொல் தழுவப்படுஞ்சொற்கு முன்னிற்றல்.[1]

இந்தியில் பல தமிழ்ச்சொற்களும் இலக்கண அமைதிகளும் வழக்குகளும் வழங்குகின்றன.

சொற்கள் :
தமிழ் இந்தி பொருள்
ஆம் ஹாம் yes
இத்தனை இத்னா இவ்வளவு
உத்தனை உத்னா உவ்வளவு
உம்பர் உப்பர் மேலே
உழுந்து உடத் (ஒரு பயறு)
ஓரம் ஓர் பக்கம்

  1. *L. S.I. Vol. IV. pp. 446, 472-4.
    Caldweli's Comparative Glammar : introduction p. 59