பக்கம்:ஓங்குக உலகம்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாட்டுக்குழைத்த நல்லவர்

99


கொண்டு மகிழ்வித்தனர். பார்வை குறைந்த காலத்தும் எங்கள் குழந்தைகள், சமயத்தோடு பொருந்திய சமுதாயத் தொண்டினைப் பாடியில் (திருவலிதாயம்) தொடங்கிய ஞான்று வந்திருந்து வாழ்த்தினார்கள்.

நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவனாயினும், பட்டம் பதவிகளை வேண்டாமென ஒதுங்கி நின்றவனாயினும் அவர் என்னிடம் இவ்வாறு நெருங்கியநிலை சிலர் உள்ளத்தில் பட்டிருக்கலாம் போலும். ஒரு கல்லூரி விழாவில் தலைமை வகித்த ஒரு பெரியவர், தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டு வந்தபோது, ‘நான் சென்னையிலிருந்து டில்லிக்கு ஒருவரால் தூக்கி எறியப்பட்டேன். இதோ எதிரில் இருக்கிறாரே (நான்தான் எதிரில் உட்கார்ந்திருந்தேன்) இவருக்கு ரொம்ப வேண்டியவரால் என்றார். அவர் திரு பக்தவத்சலத்தைத்தான் குறிக்கிறார் என்பது அன்று பலருக்கும் புரிந்த ஒன்றாகும். அப்படியே அவர் மறைந்தபோது, அங்கே பலரொடு நானும் இருந்தேன். உடனிருந்த திரு. அளகேசன் அவர்கள் பக்கத்திலிருந்த முன்னாள் அமைச்சர் பூவராகன், அன்றைய அமைச்சர் செளந்தரராஜன் போன்ற மற்றவரிடம் என்னை ‘அவருக்கு மிகவும் ரொம்பவும் வேண்டியவர்’ என்று அறிமுகப்படுத்தினார்.

திரு பக்தவத்சலம் அவர்களை அவர்கள், நோயுற்றிருந்தபோது நான் அடிக்கடி சென்று காண்பேன். மறைய ஒருசில நாட்கள் இருந்தபோது நான் கண்ட நிலை என்னைத் துணுக்குறச் செய்தது. உடனே திருமதி சரோஜினி அம்மையாரிடம் உடனே மருந்தகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என வற்புறுத்திவிட்டு வந்தேன்-மருந்தகத்தில் சேர்க்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/102&oldid=1127605" இலிருந்து மீள்விக்கப்பட்டது