பக்கம்:ஓங்குக உலகம்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

ஓங்குக உலகம்


சுட்டியதோடு, பல்கலைக்கழக வளர்ச்சி பற்றிப் பல விளக்கம் தந்தார்கள். என் வேண்டுகோளை ஏற்று அவர்கள் பேசியது, எனக்கு ஓர் உயர்வையும் பெருமையும் தந்தது என்றால் மறுக்க முடியுமா?

நான் அடிக்கடி யாரையும் சென்று பார்ப்பதில்லை; அதிலும் முதல்வர் அவர்களைக் காண்பதரிது. எங்கேனும் கூட்டங்களில் காண்பார். நான் சில சமயம் அவருக்குப் பின் இரண்டாவது வரிசையில் இருப்பேன். புறப்படும் போது பின் திரும்பி என் கையைப் பிடித்துக் குலுக்கி வாழ்த்திவிட்டுச் செல்வார். (இருமுறை நினைவில் உள்ளது, மதுரை மாநாடு, திரு.வி.க. நூற்றாண்டு விழா) பிறகு அவர்கள் ஒருமுறை சொன்னார்கள், அனைவர் முன்னிலையிலும் கைகுலுக்கித் தழுவிப் பேசினால், காணும் பலர் ‘முதல்வர் உங்களுக்குத்தெரியும், இதைச் செய்யச் சொல்லுங்கள் அதைச் செய்யச் சொல்லுங்கள்’ எனப் பின்னர் உங்களைத் தொந்தரவு செய்வார்கள். அந்தச் சங்கடத்திலிருந்து விடுவிக்கவே அப்படிச் செய்வேன் என்றார்கள். நான் அந்த வகையிலும் தொல்லைப்படக்கூடாது என்று காட்டிய அவர் பரிவினை எண்ணி எண்ணி உள்ளம் உருகினேன்.

அவர் கடமைக்காகவே வாழ்ந்தார். கடமைக்காகவே உயிர்விட்டார். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அவர் பெயரை வைக்க விரும்பவில்லை என்பதை நானறிவேன். வாழும் மனிதர் பெயரால் நிறுவனங்கள் கூடாதென வகை செய்தவர்-முறை செய்தவர்-இதைச் செய்வாரோ? சில நிலையங்கள் அந்த முறையில் பெயர் மாற்றம் பெற்றன. எனினும் இவர் விருப்பமின்றேனும் அது உருப்பெற்றது. ஆயினும் அவர் விரும்பவில்லை. எனவே அதுபற்றிய துணைவேந்தர் நியமனத்திலும் அவர் கையொப்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/109&oldid=1127616" இலிருந்து மீள்விக்கப்பட்டது