பக்கம்:ஓங்குக உலகம்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

ஓங்குக உலகம்



தமிழர்கள் வானாராய்ச்சி வல்லவர்கள். அவ் வான்வழிச் சென்றளந்தறிந்தோர் ‘போல’ அறுதியிட்டுக் கூறியவர்களும் நாட்டில் இருந்தனர் என்ற உண்மையை,

‘செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்பு சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைய காயமும், என்றுஇவை
சென்றளந் தறிந்தோர் போல என்றும்
இனைத் தென்போரும் உளரே’

(புறம் - 30)

என்றும்

‘இருமுந்நீர்க் குட்டமும்
வியல் ஞாலத் தகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய காயமும் என்றாங்கு
அவை அளந் தறியினும்’

(புறம் - 20)

என்றும்

புறநானூற்று அடிகள் நமக்கு விளக்குகின்றன. இவற்றில் ‘போல்’, ‘அறியினும்’ என்ற சொற்களால் அவை அறிய முடியாதனவே என்பதையும் எடுத்துக் காட்டத் தவறவில்லை. அவர்தம் ஆய்வு வழியிலே அத் தமிழர் கண்ட உண்மைகள் பலப்பல. இன்றைய ஆய்வாளர்கள் விண்ணில் பலப்பல சூரியர்கள் உண்டு என்கிறார்கள். அன்று அவர்கள் பன்னிரு சூரியர்களை (துவாதச ஆதித்தர்) எண்ணிக் கணக்கிட்டார்கள். மீன்களுக்கும் (Stars) கோள்களுக்கும் (Planets) உள்ள வேறுபாட்டினை நன்கு உணர்ந்து தமிழர்கள் அவற்றிற்குப் பெயரிட்டுள்ளார்கள். இயல்பாகவே ஒளிபெற்று, தம் ஒளியினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/125&oldid=1127685" இலிருந்து மீள்விக்கப்பட்டது