பக்கம்:ஓங்குக உலகம்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காகிதம்......... சீன நாட்டின் பங்கு

133


செய்யப்பெற்றது. மேலும் கவிதை, குறிப்பு, கடிதம் எழுதுவதற்கேற்ற வகையிலும், துண்டுகளாக்கி ஒப்பனை, வேலைப்பாடு, அழகுபடுத்தல் ஆகியவற்றிற்கும் ஏற்ற வகையிலும் செம்மையுறப் பலவகையிலும் வண்ணங்களிலும் காகிதங்கள் செய்யப்பெற்றன. மற்றும் ஆவணங்கள் எழுதுவதற்கும் நூல்கள் செய்வதற்கும் வண்ணம் தீட்டுதற்கும் கை எழுத்துத்திறன் காட்டும் எழுத்தமைப்புக்கும் பார்வைச் சீட்டுகளுக்கும் தெய்வ வழிபாட்டிற்கும், அட்டையிடுவதற்கும் வீட்டுப் பலகணிகளை மறைப்பதற்குமெனக் காகிதம் பலவகையில் பயன்படுத்தப்பெற்றது. அவற்றுடன் மேலும் வீட்டுப் பொருள்களாகிய விசிறி, குடை, விளக்கு, காற்றாடி, விளையாட்டுப் பொருள், தூய்மைக்குப் பயன்படு பொருள் ஆகியவை அமைப்பதற்கும்கூடக் காகிதம் பயன்படுத்தப் பெற்றது. இவையனைத்தும் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பே பழக்கத்தில் வந்து விட்டன என அறிகிறோம்.

கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டு தொடங்கி, தொப்பி, உடை, கால்உறை, படுக்கை விரிப்பு, கொசுவலை, திரை போன்றவையும் பிறவுமாகிய பல வீட்டு அழகுபடுத்தும் பொருள்களும் கருவிப் பொருள்களும் செய்யக் காகிதம் பயன்படத் தொடங்கிவிட்டதெனவும் அறிகிறோம். மேலும் தடுப்பு அல்லது தட்டி, கூரை மற்றும் போர்க்கவசம் போன்றவைக்கும் காகிதம் பயன்படுத்தப் பெற்றது. உலோகத்தாலான திண்ணிய காசுகளாகிய பணத்துக்குப் பதில் ‘பறக்கும் பண’மெனக் காகிதம் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புகுத்தப்பெற்றது. பேரரசன் ‘கான்’ என்பான் காலத்தில் காகிதப் பணம் பெரும் புழக்கத்தில் இருந்ததையும், மாதிரி உருவம் உருவப்படம் ஆகியவை இறந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/136&oldid=1127724" இலிருந்து மீள்விக்கப்பட்டது