பக்கம்:ஓங்குக உலகம்.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

ஓங்குக உலகம்


காகிதம் செய்யும் திறனறிந்த சிலர் கைது செய்யப் பெற்றவரை, இக்காகிதம் செய்யும் திறனைச் சீனர்கள் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்தனர் என்று பரவலாகச் சொல்லப் பெறுகின்றது. அக் காகிதம் செய்தொழில் கைவரப்பெற்ற உடனேயே, சீனாவின் அண்டைநாடுகள் அச் சீனப் பண்பாட்டுடன் தொடர்பு கொள்ள, நுழைந்து பரந்தமையினால், அக்கூற்று உண்மையாகாது. மேலைநாடுகளுக்கு அந்தக் காகிதம் செய்யும் கலை பரவாததற்குக் காரணம் சீனர்கள் மறைத்து வைத்தார்கள் என்று கொள்வதைக் காட்டிலும், மேலை நாடுகள் நில அலைப்பு முறையிலும் பண்பாட்டு முறையிலும் சீன நாட்டொடு தொடர்பு கொள்ளா வகையில் தனித்திருந்ததே காரணம் எனக் கொள்ளவேண்டும்.

சீனப் பண்பாடு கிழக்கு நோக்கிப் பரவத் தொடங்குகையில் கொரிய மக்கள் சீன நூல்களை வாங்கிப் பெற்றதோடு, நான்காம் நூற்றாண்டிலேயே சீன எழுத்துக்களையும் கடன் வாங்கித், தமதாக்கிக் கொண்டனர். ஜப்பானிய இளவரசருக்குப் பயிற்றாசிரியராக ஒரு கொரியப் புலவர் அழைக்கப்பெற்ற காலை, அந்த ஐந்தாம் நூற்றாண்டில் கொரியாவழி, ஜப்பானிலும் சீன நூல்கள் அறிமுகப் படுத்தப்பெற்றன. எனினும் கி.பி. 610-ல் ஒரு கொரியத் துறவி சீன நாட்டில் மை, காகிதம் ஆகியவற்றைச் செய்யும் திறனைக் கற்றுக்கொண்டு, ஜப்பான் நாட்டு அரசவையில் அவற்றை விளக்கும் வரையில் தாள் செய்யும் கலை ஜப்பானில் பரவவில்லை. இந்த நாள்தொட்டு பல நூற்றுக்கணக்கான சமயப் போதகர்களும் மாணவர்களும் கொரிய ஜப்பானிய நாடுகளிலிருந்து அக்கலையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/143&oldid=1127862" இலிருந்து மீள்விக்கப்பட்டது