பக்கம்:ஓங்குக உலகம்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எத்தனை அகத்தியர்?

147


கா. சுப்பிரமணியப் பிள்ளை, வின்சென்ட் ஸ்மித் போன்றோர் அகத்தியர் இருவரே எனச் சுட்டிச் சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் வாழ்ந்த அகத்தியர் தொல்காப்பியருக்கு ஆசிரியர் என்ற மரபு உண்டு. எனினும் இருவரைப் பற்றியும் அவர்களுக்கு இடையில் சாபம் இட்டுக்கொண்ட கதைகளும் தமிழ்நாட்டுப் பண்புக்குப் பொருந்தாதனவேயாகும். ‘திரணதூ மாக்கினி’, ‘லோப முத்திரை’ போன்ற பெயர்களும் அக் காலத்தில் காண முடியாதவை. மற்றும் தொல்காப்பியரை ‘ஐந்திரம்’ நிறைந்த தொல்காப்பியராகக் காண்கின்றோம். அகத்தியம் நிறைந்த தொல்காப்பியராகக் காணவில்லை. ‘ஐந்திறம்’ என்பதும் ‘இந்திர வியாகரணம்’ என்பதும் இல்லாத ஒன்று. எனவே ஐந்து வகை இலக்கண அமைதிகளும் வல்லவர் என்பதே இதன் பொருள். எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான். என்றபடி ‘ஐந்திறம்’ ‘ஐந்திரம்’ ஆயிற்று. மேலும் அகத்தியம் என்ற நூல் இருந்தமைக்குப் போதிய சான்று இல்லை. தொல்காப்பியர் அகத்தியரின் மாணவராகக் கொண்டாலும் அவர் பொதிய மலையில் ஊனினை அடக்கி உள்ளொளி பெருக்கிய அகத்தியர் என்றும், பிற்காலக் கதைகளுக்கு உள்ளான அகத்தியர் அல்லர் என்றும் கொள்வதே மிகவும் பொருந்தும்.

தமிழில் வழங்கும் மற்றொரு கதை காவிரியின் உற்பத்தியாகும். இதுபற்றியும் கந்தபுராணம் விளக்கிக் காட்டுகின்றது. வடக்கிருந்து வந்த அகத்தியரின் கமண்டல நீரை விநாயகர் காக்கை உருவாகிக் கவிழ்க்க


1. தொல். எழுத்து. நச்சி. முன்னுரை.
2. வரலாற்றுக்கு முன் -அ.மு.ப. பக் 81
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/150&oldid=1127911" இலிருந்து மீள்விக்கப்பட்டது