பக்கம்:ஓங்குக உலகம்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

ஓங்குக உலகம்


யப்பரின் பைந்தமிழ்க்கொடி பறக்கின்றது. இவ்வாறே பிற துறைகளில் பயின்ற மாணவர் நாடெங்கும் நலம் பெற-திறம் உற-செம்மை விளங்கச் செயலாற்றுகின்றனர். தமிழ்நாட்டு வங்கிகள் பலவற்றிலும் பல நெறியிலும் எம் மாணவர் செயலாற்றுகின்றனர். சுருங்கச் சொல்லின் எம் கல்லூரி மாணவர் ‘வாழ்வாங்கு வாழக்’ கற்றுச் சிறக்கின்றனர் எனலாம்.

பச்சையப்பர்தம் செம்மை திறம்பர் அற ஆட்சியைக் கண்ட அறவோர் பலர் தம் செல்வத்தால் அறம் வளர்க்கக் கருதிய ஞான்று, அச்செல்வங்களைப் பச்சையப்பர் அறநிலையக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். அதனால் அறநிலையப் பொருள் வருவாய் மிகுந்ததோடு, அறமாற்றும் நிலையும் உயர்ந்தது. அந்த அடிப்படையிலேயே சென்னையில் உள்ள கல்லூரி மட்டுமன்றி இங்கேயே வேறு பல நிறுவனங்களும் பிறவிடங்களில் கல்லூரிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் தோன்றி வளரலாயின. செங்கல்வராய நாயக்கர் தொழிற்பயிற்சி நிலையம் ஆண்டுதோறும் அத் தொழில் துறையில் வல்ல மாணவர்களை நாட்டுக்கு நல்குகிறது. சென்னை, காஞ்சி, சிதம்பரம் ஆகிய இடங்களில் உயர்நிலைப்பள்ளிகளும், நடுநிலைப்பள்ளிகளும் நன்கு செயல்படுகின்றன. காஞ்சியில் பச்சையப்பர் கல்லூரி தொடங்கப்பெற்று பல ஆண்டுகளாகச் சிறக்க நடைபெறுகின்றது. இவ்வாண்டு காஞ்சியிலும் கடலூரிலும் மகளிர் கல்லூரி தொடங்கியுள்ளோம். சென்னையிலும் அண்மையில் அறமாற்றிய கந்தசாமி நாயுடு பேரால் மற்றொரு கல்லூரி தொடங்கியுள்ளோம். இன்னும் சென்னையில் மகளிர் கல்லூரி ஒன்றும் பயிற்றாளர் கல்லூரி (ட்ரெயினிங்) ஒன்றும் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். எங்கள் கல்விப்பணி ஒல்லும் வகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/85&oldid=1127777" இலிருந்து மீள்விக்கப்பட்டது