பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

பாவம், பொழுது விடிந்ததிலிருந்து அவன் எவ்வளவு பாடுபட்டுவிட்டான் ! ...

‘ ஏ, தம்பி !”

அழைப்புக் குரல் கேட்டுத் திரும்பினன். ஒளி விளக்கின் பாதத்தில் இரட்டை நாடி ஆசாமி ஒருவர் காலடியில் சாய்த்து வைத்திருந்த பெட்டியுடன் நின்றார். இதை பஸ் ஸ்டாண்டுக்குக் கொண்டுவா; இருபத்தஞ்சு காசு கூலி தாரேன் !’ என்றார்.

'சரி’ என்று பையன் பெட்டியினைத் தலையில் தூக்கிக்கொண்டு நடந்தான். விழிமூடி விழி திறப்பதற்குள் அவன் கடமை நிறைவேறிவிட்டது.

பெரிய மனிதர் சொன்ன சொல்படி காசுகளை நீட்டினர்.

என்ன ஆச்சரியம்! ...

உமைபாலன் பதின்மூன்று காசை மட்டிலும் எடுத்துக்கொண்டு, மிகுதியை உரியவரிடமே திருப்பிக் கொடுத்தான். “ என் உழைப்புக்கு இதுகூட அதிகம்னு தோணுதுங்க, பெரியவரே!” என்று மிடுக்குடன் பதில் கூறியபடி, வணக்கம் சொல்லி நடந்தான்.

ஓர் இட்டிலியும் ஒரு சாயாவும் அந்தச் சிறிய கும்பிக்குப் போதும் போலும் !

அடுத்தது ஹோட்டல் வந்தது. ஆம்; ஹோட்டல் வரவில்லை; அவன் ஹோட்டலுக்கு வந்தான். நுழைவாசலில் வைத்திருந்த படங்களைக் கண்டதும் அவன் கரங்குவித்தான். கல்லாவில் இருந்த முதலாளியிடம் பணிவுடன் நெருங்கி ஏதாவது வேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/10&oldid=1160544" இலிருந்து மீள்விக்கப்பட்டது