பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

தம்பி, என்ற அச்சொல் அவனைப் புல்லரிக்கச் செய்தது.

இரு புறமும் அற்புதமாக அலங்காரம் செய்து போடப்பட்டிருந்த நாற்காலிகளும் அவற்றின் உச்சியில் அலங்காரம் செய்த வண்ணம் இருந்த சுவாமி படங்களும் சிறுவனின் பிஞ்சு மனத்தைக் கவரலாயின.

"தம்பி!”

உள்ளே எட்டிப் பார்த்தான்.

அது ஒரு கிட்டங்கி.

மூட்டை முட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. டின்கள் வேறு. வேறு சின்னப் பையன் ஒருவன் குந்தியபடி அரிசி அளந்துகொண்டிருந்தான். அவன் வேர்வையை வழித்துவிட்டுக் கொண்டு ஒயிலாகத் தன்னுடைய சட்டைக் காலரைத் துாக்கிவிட்டபடி, உமைபாலனே ஜாடையாகப் பார்த்துச் சிரித்தான்.

சிறுவர் பட்டாளத்துக்குப் பொழுது போக்குவதற்குக் கூட இன்னொரு புள்ளி கிடைத்துவிட்டது என்கிற மனுேபாவத்தில் விளைந்த சிரிப்புப் போலும்! ஆனாலும், அவனுக்கென்று இப்படி ஒரு கர்வமா?

உமைபாலன் நடந்தான்.

அடுத்த அறையில் சரக்குப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

கோபு ஒரு போண்டாவை எடுத்து ஊதி அதை உமைபாலனிடம் நீட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/16&oldid=1161932" இலிருந்து மீள்விக்கப்பட்டது