பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129

போனாக்கா திவில் அவர்கள் நங்கூரம் பாய்ச்சிக் கப்பலை நிறுத்தியிருந்தபோது ஒரு கப்பலளவு பெரிய இந்திய ஓடத்தைக் காண நேரிட்டது. இவ்வோடத்தில், அறைகள் அமைக்கப் பெற்றிருந்தன. பருத்தித் துணிகளும் செப்புத் தளவாடப் பொருள்களும். உலோகங்களை உருக்கப் பயன்படுத்தும் மூசைகளும், ஹியூபோ என்ற பழச்சாற்றில் செய்யப்பட்ட பீர் அடங்கிய சுரைக் குடுக்கைகளும், சாக்சாலோ பீன்சுகளும் அந்த ஓடத்தில் வாணிகச் சரக்குகளாக ஏற்றப்பட்டிருந்தன. அந்த ஓடம் ஓட்டியைக் கொலம்பஸ் பலவந்தமாகப் பிடித்துத் தன் கப்பலில் ஏற்றிக்கொண்டான். அவன் பிறகு, வழிகாட்டியாகவும், மொழி பெயர்ப்பாளனாகவும் கொலம்பசுக்குத் துணையாகப் பயன்பட்டான்.

ரியோ ரோமானோவிலிருந்து புறப்பட்ட இருபத்தெட்டு நாட்களுக்கு இடையில் கொலம்பஸ் மீண்டும் காற்றின் கொடுமைக்கு ஆட்பட வேண்டியிருந்தது. தொடர்ந்து பெய்த மழையும், இடியும், மின்னலும், இதயங்குலுக்கும் பயங்கரத்தை உண்டாக்கி விட்டன. ஊழிக்கால மழை போல் சிறுங் காற்றோடு கூடித் தொடர்ந்தடித்த இம்மழை. ஊக்கமும் வீரமும் மிக்க பழம் புலிகளையே உள்ளம் குலைய வைத்தது. ஒவ்வொருவரும் தங்களைக் காப்பாற்றிவிட்டால் யாத்திரை போவதாகவும், பாவம் எதுவும் செய்வதில்லை யென்றும் ஆண்டவனைத் தொழுது வேண்டிக்கொண்டார்கள். தங்கள் பாவங்களை யெல்லாம், மற்றவர்கள் காது கேட்கும்படியாகக் கூறி ஒவ்வொருவரும் இறைவனிடம் மன்னிப்புக் கோரித் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள்.

கொலம்பஸ் தன் மனவுறுதியினாலேயே. இந்நிலையைச் சமாளித்தான் என்று சொல்லவேண்டும். அவனுக்கிருந்த மனவுறுதி யிருந்தாலொழிய வேறு யாரும் இந்தத் துயரத்தி-