பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11


கதை முடிந்தது

அலுப்பும் கொண்டு இன் விவர அலுப்பும் சலிப்பும் நிறைந்த தன் நீண்ட நான்காவது பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் வந்து சேர்ந்தான் கொலம்பஸ். தன் பயணத்தின் விவரங்களைக் குறித்து, அரசர்க்கும் அரசியார்க்கும் டீகோ மெண்டஸ் வசம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினான். அரசரும் அரசியாரும் கொலம்பசுக்கு வேறு எதுவும் செய்யவில்லை என்றாலும், அவனை நேரில் அழைத்துப் பயணம் பற்றி விசாரிக்கக் கூட இல்லை. வெளிநாடு. சென்று வந்த ஒரு கப்பல் தலைவனுக்கு கிடைக்க வேண்டிய மிகக் குறைந்த இந்த மரியாதை கூடத் தனக்குக் கிடைக்கவில்லையே என்பதை எண்ணி நொந்து போனான் கொலம்பஸ்.

கொலம்பஸ் ஸ்பெயின் வந்து சேர்ந்த சமயத்தில், செகோவியா என்ற ஊரில் தங்கியிருந்த அரசி இசபெல்லா நோய்வாய்ப்பட்டிருந்தாள். அது காரணமாகவே கொலம்பஸ் அழைக்கப் பெறவில்லை என்று அரசாங்கச் சார்பில் கூறப்பட்டது. நோயினால் துன்புற்றிருக்கும் அரசியாரைக் கொலம்பஸ் வந்து சந்தித்துத் தன் துயரக் கதைகளைக் கூறினால், அது அரசியாரின் உடல் நிலையைப் பாதிக்கும் என்று அரசர் கருதினார். ஆகவே, கண்டிப்பாகக் கொலம்-