பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

என்றே சொல்ல வேண்டும் ஒப்பந்தப்படி அவனுக்குச் சேரவேண்டிய பல தொகைகள் கிடைக்கவில்லை என்றாலும், ஓரளவு கிடைத்ததே போதுமானதாகத்தான் இருந்தது. அவன் தன் நான்காவது பயணத்தில் கொண்டுவந்த தங்கம் நிறைய இருந்தது. அது தவிர அவனுடைய வரிப் பங்குப் பணமாக கப்பல் தலைவன் காரலாஜல் கொண்டு வந்து சேர்த்த தங்கம் வேறு இருந்தது. அதுவுமல்லாமல் கவர்னர் ஓவாண்டோ வேறு சாண்டா டோமிங்கோ சென்றிருந்தபோது அவனுக்குரியதாக ஒரு பேழை நிறையத் தங்கம் கொடுத்திருந்தான்.

இருந்தாலும் தனக்குச் சேர வேண்டியது முற்றிலும் சேரவில்லை என்ற குறையிருந்தது கொலம்பசுக்கு. ஒப்பந்தப்படி அவனுக்குச் சேரவேண்டிய பொன் முழுவதும் ஒழுங்காகக் கொடுக்கப் பட்டுவந்திருந்தால், அவனும், அவனுடைய சந்ததியினரும், மன்னர்களைக் காட்டிலும் பெரிய செல்வந்தர்களாகியிருக்க முடியும். சிறிது உடல் நலம் ஏற்பட்டவுடன் கொலம்பஸ் அரசர் பெர்டினாண்டைச் சந்திக்கப் புறப்பட்டான். குதிரை வளர்ப்பவர்களின் கட்டுப்பாட்டின் காரணமாக அக்காலத்தில் ஸ்பெயினில் யாரும் மட்டக் குதிரை வைத்துக் கொள்ளக் கூடாதென்று சட்டம். இருந்தது குதிரையில் ஏறிச் சென்றால், கொலம்பசுக்கு அப்போதிருந்த உடல் சிலையில் வேதனை பொறுக்க முடியாததாயிருக்கும். ஆகவே, தனக்கு ஒரு மட்டக்குதிரை வாங்க அனுமதி வேண்டும் என்று கேட்டிருந்தான் கொலம்பஸ். கருணையுள்ளத்தோடு அரசர் பெர்டினாண்ட் அனுமதி வழங்கினார். மட்டக்குதிரையில் ஏறிப் பயணம் செய்து, அரசர் தங்கியிருந்த செகாவியா என்ற ஊருக்குப் போய்ச் சேர்க்தான்.