பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

முடிவுசெய்தேன். இந்தியத்தீவுகளில் எப்போதும் மே மாதத்துப் பருவநிலை இருப்பதைக் கண்டேன். முப்பத்து மூன்று நாட்களில் நான் அங்கு போய்ச் சேர்ந்துவிட்டேன். 28 நாட்களில் நான் திரும்பியிருப்பேன். ஆனால், புயல் எழுந்து 23 நாட்கள் என்னைக் கடலில் அலைக்கழிய வைத்து விட்டது. இங்குள்ள கப்பல்காரர்கள், இவ்வளவு மோசமான குளிர்காலத்தைக் கண்டதில்லையென்றும், பல கப்பல்களை இழக்கும்படி நேரிட்டதென்றும் கூறுகிறார்கள்.

மார்ச்மாதம் 4ம் நாள் எழுதியது.

கொலம்பஸ் எழுதிய இந்தக்கடிதத்தில் அவன் தன் அனுபவங்களைச் சுருக்கி எழுதியிருந்தான் என்றாலும், சில இடங்களில் மிகைப்படுத்தி எழுதியிருந்தான். சில இடங்களில் அவன் தான் காணாதவைகளை, அனுமானத்தின் பேரில் எழுதியிருந்தான். ஒரு தலைநகரத்தைக் கூடக் காணாவிட்டாலும், அவன் அந்தத் தீவுக் கூட்டங்கள் ஆசியப்பகுதியைச் சேர்ந்தவை என்றே நம்பிக்கொண்டிருந்தான்.