பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1468

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

track

1467

tracking


வரலாற்றைக் கூறும் வாலாயம். ஒரு முழுமையான தேடும் வாலாயம் மூலம் ஒவ்வொரு முறை நிரல் செயல்படுத்தப் படும்போதும் பாதிக்கப்படும் இருப்பிடங்கள் மற்றும் அனைத்துப் பதிவகங்களின் தகுதியைக் கண்டறிய முடியும்.

track : ஓடுபாதை;தட வரிசை;தடம் : 1. காந்த நாடா அல்லது காந்தவட்டு போன்ற தொடர்ச்சியான அல்லது சுழலும் ஊடகம் மீது தரவுகள் செல்லும் பாதை. 2. ஒளிக்காட்சியில் காட்டப்படும் சுட்டி (கர்சர்),

ஓடுபாதை


எழுத்தாணி, சுட்டுப்பொறி (மவுஸ்) அல்லது பிற உள்ளிட்டுச் சாதனத்தில் நகரும் நிலையைப் பதிவு செய்தல் அல்லது பின்தொடர்தல்.

track address : தடவரிசை முகவரி.

track ball : தடக்கோளம்;கோளச் சுட்டி : ஒரு கணினி காட்சித் திரையில் சுட்டியைத் தேடப் பயன்படுத்தும் சாதனம். ஏற்றும் சாதனம்,


தடக் கோளம்

பொதுவாக ஒரு பெட்டி, ஒரு பந்தில் அமைக்கப் படுகிறது. பயனாளர் அந்தப் பந்தைச்சுழற்றினால் சுட்டி அதே வேகத்தில் நகரும். பந்தின் திசையிலேயே அது நகரும்.

track changes : மாற்றங்கள் குறித்து வை : எம்எஸ் வேர்டில் ஒரு கட்டளை.

track density : தட அடர்வு.

tracking : தேடல் : ஒளிப்பேனா, மின்னணு பேனா, கோளச் சுட்டி அல்லது சுட்டுப்பொறி ஆகியவற்றைக் கொண்டு காட்சித்திரையின் மேற்பகுதியில்