பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

command language

102

commerce server


command language : கட்டளை மொழி : ஆணை பெயர்ப்பி அமைப் பால் சரியானவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட சொற்களும் சொற் கோவைகளும் கொண்ட தொகுதி.

command line : கட்டளை வரி : ஆணை மொழியில் எழுதப்பட்ட உரைக்கோவை, செயல்படுத்து வதற்கு ஆணை பெயர்ப்பிக்கு அனுப்பி வைக்கப்படுவது.

command line arguments : கட்டளை வரி உள்ளீடுகள்.

command line operating system : கட்டளை வரி இயக்க முறைமை.

command line user interface : கட்டளை வரி பயனாளர் இடைமுகம்.

command line interface : கட்டளை வரி இடைமுகம் : இயக்க முறைமைக் கும் பயனாளருக்கும் இடையே உள்ள ஒருவித இடைமுகம். பயனாளர் அதில் ஆணை களை ஒரு தனிவகை ஆணை மொழியைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்வார், கட்டளைவரி இடைமுகம் கற்றுக் கொள்வதற்குக் கடினமானது என்று கருதப்படுவது வழக்கமென்றாலும், ஆணை அடிப்படை கொண்ட அமைப்புகள் செயல் முறைப் படுத்தத்தக்கவை. செயல் முறைப் படுத்தும் இடைமுகம் அற்ற வரை கலை அடிப்படை கொண்ட அமைப் பில் இல்லாத நெகிழ்வு கிடைக்கிறது.

command path : கட்டளை வழி.

command prompt : கட்டளை தூண்டி.

command state : கட்டளை நிலை : ஒரு தொலைபேசி எண்ணுக்கு தொலைபேசி இணைப்பு ஏற்படுத்து என்று கூறப்படுவது போன்ற கட்டளைகளை இணக்கி (மோடெம்) ஏற்றுக் கொள்கிற நிலை.

comment out : விளக்கக் குறிப்பாக்கு : ஒரு நிரலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிகளை தற்காலிகமாக விளக்கக் குறிப்புப் பகுதியில் அடைத்துச் செயல்பட இயலாமல் செய்தல்.

commercial data processing : வணிகத் தரவு செயலாக்கம்.

commercial internet exchange : வணிக இணைய இணைப்பகம் : பொதுமக்களுக்கு இணைய சேவை அளிக்கும் இலாப நோக்கமில்லாத வணிக அமைவனம். வழக்கமான பிறர்சார்பான நடவடிக்கைகள், சமூக நடவடிக்கைகள் ஆகியவற்றோடு கூட அதன் உறுப்பினர்களுக்கு இணைய இணைப்பு வசதியையும் அளிக்கிறது.

commerce server : வணிக வழங்கன்; வணிகப் சேவையகம் ; நேரடியாகத் தொழில் நடவடிக்கைகள் நடத்து வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு எச்டீடீபி வழங்கன் கணினி. பற்று அட்டை எண்கள் போன்ற தகவல் களை மறைக் குறியீட்டு முறையில் வழங்கனுக்கும் வலை உலாவிக்கும் இடையில் தகவல் மாற்றம் செய்யப் படுகிறது. அஞ்சல்வழி வணிகம் புரியும் கம்பெனிகளும் வணிக வழங்கன்களை பயன்படுத்து கின்றன. சேமிப்பகம் அல்லது கம்பெனி அளிக்கும் பண்டங்கள் அல்லது சேவைகள் ஒளிப்படங் களாக விளக்கப்பட்டு காட்சியாக சேமிப்பகம் அல்லது கம்பெனியின் வலைத்தளத்தில் காட்டப்படு கின்றன. பயனாளர்கள் நேரடியாகத் தங்கள் வலை உலாவியைப்