பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

friendly

198

FTP site


இரு பல்சக்கரங்களின் மேல் இடப்பட்டு, சக்கரங்கள் சுழலும் போது நகர்த்தப்படும். ஆனால் சில அச்சுப்பொறிகளில் தட்டுகளில் தாள்கள் வைக்கப்பட்டு அதன் மீது சுழலும் அழுத்த உருளை (Pressure Roler) மூலமாக நகர்த்தப்படும். இன்னும் சிலவற்றில் சுழலும் இரு உருளைகளுக்கு இடையில் உட் செலுத்தப்படும். துளையில்லாத தாள்களை உட்செலுத்த இது போன்ற உராய்வு செலுத்த முறை பயன்தரும்.

friendly : தோழமையான : கணினியை அல்லது கணினி நிரலை எவரும் எளிதாகக் கற்றுக் கொள்ளவும், எளிதாகப் பயன்படுத்தவும் ஒரு வன் பொருள் அல்லது ஒரு மென் பொருளில் உள்ளிணைக்கப்பட்டுள்ள ஒருவசதி, தோழமை என்பது பெரும் பாலான தயாரிப்பாளர்களால் வலி யுறுத்தப்படுகிறது. பெரும்பாலான பயனாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

friendly interface : தோழமையான இடைமுகம்

friendly user : பயனாளர் தோழமை

fringeware : கொசுறுப்பொருள் : இலவசமாகத் தரப்படும் மென் பொருள். ஆனால் அதன் மதிப்பும் செயல்திறனும் கேள்விக்குரியது.

front end : முன்னிலை பிறிதொரு பயன்பாடு அல்லது மென்பொருள் கருவியுடன் ஒரு இடைமுகத்தை ஏற்படுத்தித் தரும் ஒரு பயன்பாட்டு மென்பொருள் அல்லது அதன் ஒரு கூறு. இத்தகைய முன்னிலைக் கருவி யாகச் செயல்படும் பயன்பாட்டுத் தொகுப்புகள் பின்புலமாய்ச் செயல் படும் மென்பொருளைக்காட்டிலும் மிகவும் தோழமையான ஒர் இடை முகத்தை பயனாளருக்கு வழங்கும். வெவ்வேறு தயாரிப்பாளர்களின் மென்பொருள் படைப்புகளுக்கும் ஒரே மாதிரியான இடைமுகத்தை முன்னிலைக் கருவிகள் வழங்கு கின்றன. 2. வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தளம் பின்னிலை (Back End) என்றும், கிளையன் கணினிகளில் செயல் படும் பயன்பாட்டுத் தொகுப்புகள் முன்னிலைக் (Front End) கருவி என் றும் அழைக்கப்படுகின்றன. (எ-டு) ஆரக்கிள் பின்னிலைத் தரவுத் தளம். விசுவல் பேசிக், டெவலப்பர் 2000 ஆகியவை முன்னிலைக் கருவிகள்.

front end tool : முன்னிலைக் கருவி.

front panel : முகப்புப் பலகம் கணினிப் பெட்டியில் அதன் இயக்கு விசைகள், விளக்குகள், கட்டுப் பாட்டுக் குமிழ்கள் அடங்கிய முகப்புப் பட்டிகை.

FTP commands : எஃப்டீபீ கட்டளைகள்

கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் (File Transfer. Protocol) கட்டளைத் தொகுப்பு.

FTP server ; எஃப்டீபீ சேவையகம்; எஃப்டீபீ வழங்கன்:

Host - புரவன்: இணையம் வழியாகவோ அல்லது எந்தவொரு டீசிபி/ஐபி பிணையம் வழியாகவோ, கோப்புப் பரிமாற்ற நெறிமுறையைப் (FTP) பயன்படுத்தி, பயனாளர்கள் கோப்புகளை பதி வேற்ற அல்லது பதிவிறக்க அனுமதிக்கும் ஒரு கோப்பு வழங்கன் கணினி.

FTP site : எஃப்டீபீ தளம் : எஃப்.டீ.பீ. வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகள் மற்றும் நிரல்களின் தொகுப்பு.