பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

list error

269

live 3D


ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கும்.பட்டியல் பெட்டி இருவகையாகத் தோற்றமளிக்கும்.முதல் வகை:தகவலை உள்ளீடு செய்வதற்குரிய உரைப்பெட்டி (Text Box) ஒன்று இருக்கும். அதனை ஒட்டிக் கீழே ஒரு பட்டியல் தோற்றமளிக்கும்.பட்டியலிலிருந்து தேர்வு செய்யும் உறுப்பு உரைப்பெட்டியில் வந்து அமர்ந்து கொள்ளும்.இரண்டாவது வகை உரைப்பெட்டி மட்டுமே இருக்கும்.வலது ஓரத்தில் சிறிய தலைகீழ் முக்கோணப் புள்ளி இருக்கும்.அதைச் சொடுக்கினால்,பட்டியல் விரியும்.பட்டியலிலுள்ள ஓர் உறுப்பை தேர்வுசெய்துகொள்ளலாம். இரண்டுவகை பட்டியல் பெட்டிகளிலும்,பயனாளர் தாமாக எதையும் உள்ளீடு செய்யமுடியாது.

list error:பட்டியல் தவறு.

list rows:பட்டியல் கிடைக்கைகள்.

LISTSERW:லிஸ்ட்செர்வ்:வணிக முறையிலமைந்த மிகவும் செல்வாக்குப் பெற்ற அஞ்சல் பட்டியல்.எல்-சாஃப்ட் பன்னாட்டு நிறுவனம் பிட்நெட்,யூனிக்ஸ் மற்றும் விண்டோஸில் செயல்படும் பதிப்புகளை வெளியிட்டுள்ளது.

listing:பட்டியலிடு.

lithium ion battery:லித்தியம் அயனி மின்கலம்:உலர் வேதியல் கலன்களில் ஒரு மின்சக்தி சேமிப்பு சாதனம்.வேதியல் ஆற்றலை மின்னாற்றலாய் மாற்றும் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.விலை அதிகமான போதும் மடிக்கணினிகளுக்கு லித்தியம் அயனி மின்கலன் மிகவும் உகந்ததாய்க் கருதப்படுகிறது. ஏனெனில்,மடிக்கணினிகளில் அதிவேக செயலிகள்,சிடி ரோம் இயக்ககம் போன்ற சாதனங்கள் எடுத்துக்கொள்ளும் அதிகமான மின்சாரத்துக்கு ஈடுகொடுப்பதிலும்,உயர் சேமிப்புக் கொள்திறனிலும் இது,நிக்கல் கேட்மியம் மற்றும் நிக்கல் உலோக ஹைடிராக்ஸைடு மின்கலன்களைக் காட்டிலும் சிறந்ததாக உள்ளது.

little endian:சிறு முடிவன்:எண்களை இரும முறையில் இருத்தி வைப்பதில் ஒருமுறை. குறை மதிப்புள்ள பைட் முதலில் இடம்பெறும்.(எ-டு) A028 என்னும் பதினறும எண்ணை எடுத்துக் கொண்டால் சிறுமுடிவன் முறையில் 2BA0 என்று பதிந்து வைக்கப்படும்.இன்டெல் நுண்செயலிகளில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது.இம்முறை பின்னோக்கு பைட் வரிசை என்றும் அழைக்கப்படும்.

live:நேரடி;நிகழ்நேர:1.ஒரு நிரல், சோதனைத் தரவுகளுக்குப் பதில் உண்மையான தரவுகளின் அடிப்படையில் இயங்குவது.2.ஓர் இணையத்தளத்தில் ஏற்கெனவே பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ள கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலை இணைய இணைப்பின் மூலம் பெறமுடியும்.அவ்வாறில்லாமல் அவை உருவாக்கப்படும் போதே அலைபரப்பச் செய்வது. 3.ஓர் ஆவணத்தை அல்லது ஆவணத்தின் ஒரு பகுதியை பயனாளர் இணையம் வழி பார்வையிடும் போதே மாற்றியமைக்க வாய்ப்பளிப்பது.

Live 3D:லைவ் 3டி(நிகழ்நேர 3டி): நெட்ஸ்கேப் நிறுவனத்தின் மென்பொருள்.வலை உலாவியுடன் இணைக்கப்பட்ட மெய்நிகர் நடப்பு