பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.mg

287

microminiature



தகவல் இணையத்தின் முதன்மை முதுகெலும்புப் பிணையம் வழியாகப் பயணிக்காது. மாநகர இணைப்பகமே இப்பணியை மேற்கொள்ளும்.

.mg : .எம்ஜி : ஒர் இணைய தள முகவரி மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

mget : எம்கெட் : பல்முனைப் பெறு தல் எனப் பொருள்படும் multiple get என்பதன் சுருக்கம். எஃப்டீபி (கோப்புப் பரிமாற்ற நெறிமுறை) கிளையன்களில் பயன்படுத்தப்படும் கட்டளை. இதன்மூலம் ஒரு பயனாளர் ஒரே நேரத்தில் பல்வேறு கோப்புகளை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைக்க முடியும்.

.mh : எம்ஹெச் : ஒர் இணைய தள முகவரி மார்ஷல் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

microimage : நுண்படிமம் : ஒளிப் படமாக்கிச் சிறிதாக்கப்பட்ட படிமம். பொதுவாக நுண்படச் சுருள் களில் சேமித்து வைக்கப்படும். மிகவும் சிறிதாக இருக்கும். உருப் பெருக்கி வழியாகத்தான் பார்க்க முடியும்.

Micro Channel Architecture : நுண் தடக் கட்டுமானம் : ஐபிஎம் பீஎஸ்/2 கணினிகளில் (25 மற்றும் 30 மாதிரிகள் தவிர) உள்ள பாட்டை களின் வடிவமைப்பு. இத்தகைய பாட்டைகள் ஐபிஎம் பிசி/ஏடீ கணினிகளின் பாட்டை அமைப் புடன் இணைப்பு அடிப்படையிலும் மின்சார அடிப்படையிலும் ஒத்தியல் பற்றவை. பீசி/ஏடீ பாட்டை போலன்றி நுண்தடப் பாட்டைகள் 16துண்மி (bit), அல்லது 32 துண்மி(bit) பாட்டைகளாகச் செயல்படுகின்றன. பல்பாட்டை நுண்செயலிகளினால் தனித்த முறையிலும் இவற்றை இயக்க முடியும்.

microcircuit : நுண்மின்சுற்று : ஒரு குறைக்கடத்திச் சிப்பு மீது செதுக் கப்பட்ட மிகச்சிறு மின்னணுச் சுற்று. டிரான்சிஸ்டர்கள், ரெசிஸ்டர்கள் போன்ற மின்பொருள்கூறுகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நுண்மின் சுற்று உருவாக்கப்படு கிறது. இது, வெற்றிடக் குழாய்களின் ஒரு தொகுதியாகவோ, தனித்தனி டிரான் சிஸ்டர்களின் இணைப்பாகவோ இல்லாமல் ஒர் ஒற்றை அலகாக வடிவமைக்கப்படுகிறது.

microkernel : நுண் கருவகம் : 1. ஓர் இயக்க முறைமையின் வன்பொருள் சார்ந்த நிரல்பகுதி. வெவ்வேறு வகை யான கணினிகளில் ஒர் இயக்க முறைமையைச் செயல்படுத்தும் நோக்கத்தில் நுண்கருவகம் அமைக்கப்படுகிறது. நுண்கருவகம் இயக்கமுறைமையுடன் ஒரு வன் பொருள் சாரா இடைமுகத்தை வழங்குகிறது. எனவே ஒர் இயக்க முறைமையை வெவ்வேறு பணித் தளங்களில் செயல்பட வைக்க வேண்டுமெனில் நுண்கருவகத்தை மட்டும் மாற்றி எழுதினால் போதும். 2. ஒர் இயக்க முறைமையின் மிக அடிப்படையான பண்புக் கூறுகளை மட்டுமே கொண்டு வடிவமைக்கப் பட்ட ஒரு கருவகம்.

micro virus : நுண் நச்சுநிரல்

microminiature : நுண்சிறுமம் : மிகமிகச் சிறிய மின்சுற்று அல்லது மின்னணு பொருள்கூறு. குறிப் பாக, எற்கெனவே மிகச் சிறிதாக்கப்பட்ட