பக்கம்:கனிச்சாறு 5.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


உண்மைக் கென்றும்
மதிப்புண்டு, நல்ல
உழைப்புக் கென்றும்
விளைவுண்டு!
திண்மைக் கென்றும்
துணிவுண்டு, மனத்
தெளிவுக் கன்பின்
கனிவுண்டு!

பொறுமைக் கென்றும்
வழியுண்டு, உளப்
பொறாமைக் கென்றும்
நலிவுண்டு!
வெறுமைக் கென்றும்
இழிவுண்டு!, நல்ல
விளைவுக் கென்றும்
புகழுண்டு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/202&oldid=1444983" இலிருந்து மீள்விக்கப்பட்டது