பக்கம்:கனிச்சாறு 5.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  31


வைக்கோல் போரும் ஏற்றிடும்!
வண்டல் மணலும் நிரப்பிடும்!
கைக்கோல் ஒன்று வேண்டுமே;
காளை தம்மை விரட்டவே!

-1969


32 விளையாட்டு!

பந்தைத் தூக்கிப் போடு!
பசிக்கப் பசிக்க ஆடு!

மூச்சைப் பிடித்துப் பழகு!
முகத்தில் தோன்றும் அழகு!

நீளம் உயரம் தாண்டு!
நீ வளர்வாய் நீண்டு!

நாளும் நீரில் நீந்து!
நல்ல மார்பை ஏந்து!

முன்னும் பின்னும் வளை!
முகத்தில் மிளிரும் களை!

மாலை வெய்யில் குளி!
மடிமை என்றும் ஒழி!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/65&oldid=1424862" இலிருந்து மீள்விக்கப்பட்டது