பக்கம்:கனிச்சாறு 6.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  85


58

பரிதியின் காதல்!


வையத்தின் மக்கள் நெஞ்சின்
இருளினைப் போக்கி என்றும்
ஒளி செய்க! என்றே உன்னை
இயற்கைத் தாய் அனுப்ப, நீயோ

செய்வது என்ன, சொல்வாய்
செவ்வொளிப் பிழம்பே! காலை
கடலினுள் குளித்து பொன்போற்
கந்தக உடை யணிந்த

பொய்கையின் கரை யோரத்தே
இரவெலாம் வாடி, உள்ளம்
புலந்தா ளோர் நங்கை! அந்தப்
பூ முகத் துள்ள நீரைக்

கையால் நீ துடைத்து ஊடல்
தீர்ப்பதும், இதழை மாந்தி
முகத்தினை நீவி முத்தம்
ஈவதும் அறிவேன் நன்கு!

அக்கொடி யிடையா ளை நான்
அறிகுவேன்; தாமரைதான்
அவள் பெயர் தெரியும், உந்தன்
ஆவலும் அறிவேன், ஆனால்

கொடியனை யாளைநீயோ
அறிந்திலை போலும்! உந்தன்
அணைப்பிலே பகலும், திங்கள்
அணைப்பிலே இரவும் போக்கும்

மிக்கொடி யாளைப் பற்றி
மிகுதி யா யுணர்வேன்! நீ சென்று
ஒன்றிணைத் திடும் போதங்கே
குழலிசை கேட்டி ருப்பாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/111&oldid=1445364" இலிருந்து மீள்விக்கப்பட்டது