பக்கம்:கனிச்சாறு 6.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  89

இனிய நல்லிசை! எழுந்தது! அதற்குள்
முனகல் வோசை மூட்டிய தாரவர்?

அழுவதார் ஓ ஓ.... அதுவென் பிள்ளை!
ஏனழு கின்றாள்! என்ன இழவிது?
மீண்டும் கனவில் மிதந்த தென் னுள்ளம்!
தாண்டிப் போவது யாரோ? நானோ
அடிக்குங் காற்றில் விளக்கொளி ஆடி
நடுங்குதல் போலவே நடுங்கு கின்றேனே!
இத்தனை காட்சிகட் கிடையில் நானொரு
பித்தனைப் போலப் பிதற்றுகின் றேனாம்!
வீட்டின் விளக்காய் வாழ்வை வந்தெனக்
கூட்டுகின்றவென் உண்மை மனைவி
உணர்த்தினள்! நானென்ன உயிரற் றவனா?
பசித்தது வயிறெனப் பகர்ந்தீ போல்! எனைப்
புசிக்க வருகென, அழைத்ததும் போனதென் னுடலே!

-1955 (?)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/115&oldid=1445370" இலிருந்து மீள்விக்கப்பட்டது