பக்கம்:கனிச்சாறு 6.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


69

ஆடிய வன்புயல்!


வானங் கருத்தது; வையம் இருண்டது;
வாரி யெனுந்தட நீர்அலை கொண்டது!
தானென் செருக்குடன் தண்கடல் சீய்த்தொரு
தாண்டவச் சூறைவான் தாவி யெழுந்தது!
கானம் படுவன் களிற்றினம் யாவுமே
காழ்நடை ஆர்ப்பொடு காய்த்திவண் வந்ததாய்க்
கூனம் படுநெடுங் குன்றுங் குலுங்கிடக்
கொல்புயல் பேய்ப்படை கொண்டெதிர் ஆர்த்ததே! 1

ஆர்த்தது வான்புயல்! ஆர்த்தது நீள்கடல்!
ஆவெனும் ஓலத் தெழுந்தது பேரலை!
போர்த்தது நீர்த்திரை! பொங்கிச் சுழன்றது!
போய்வரு மீன்பிடி புன்மைப் படகுகள்
நீர்த்துமி தாண்டவத் துட்பொடி யாயின!
நீண்ட நெடுங்கரை நின்ற மரக்கலஞ்
சூர்த்த பெரும்புயற் சூறைச் சுழியிடைச்
சுக்குநூ றாகிச் சுருண்டன நீருளே! 2

கண்ணை யளாவிப் பறித்தொளி மின்னிடக்
காதை யளாவிக் கிழித்திடி மேல்விழ
விண்ணை யளாவித் திமிர்ந்தெழு வான்புயல்
வேகம் அளாவிச் சுழன்றெதிர் வீசிட
எண்ணை யளாவிய தென்னை,வா ழைக்குலம்
ஏந்துபூம் பிஞ்சுகா யோடெழு மாவினம்
மண்ணை யளாவிட மாமலை போலெழு
மந்திர ஆழிமுன் மக்களென் செய்வரோ? 3

பாய்புனல் காய்கணி பூமரம் பாவிட
பாற்கதிர் சாய்வயல் பாறுமண் மேடிட
வேய்குடில் நூறுநா றாயிரம் நூறிட
வீறிடும் செம்புனல் வீழ்கரை மீறிட
காய்வயி றோடுழல் ஏழையர் கையறக்
காலப் பெரும்புன லோடு கலந்து,கால்
வாய்வழி யோடி வயல்வெளி மாறிய
வன்பிணக் காட்டிடை ஆடிய வன்புயல்!
ஆடிய வன்புயற் கந்தமிழ் நாடுமிங் 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/126&oldid=1445387" இலிருந்து மீள்விக்கப்பட்டது