பக்கம்:கனிச்சாறு 6.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௧௯


43. இளம்பெண் ஒருத்தியின் அழகு நலன்களை எண்ணி ‘அவள் அருகில் வரமாட்டாளா?’ என்று ஏங்கிப் பாடியது.

44. மகனை இணக்கப்படுத்தி, பெண்ணைப் பார்த்து வர அனுப்புகிறாள் தாய்.( எழுதி முடிக்கப்பெறாமல் சுவடியில் இருந்த பாடல்)

45. இப்பாடலும் எழுதி முடிக்கப்பெறாமல் சுவடியில் இருந்தது.

46. இதுநாள் வரையிலும் வராதவன் இன்று வந்ததே தன் பெருமகிழ்வுக்குக் காரணம் என்கிறாள் தோழி.

47. இப்பாடலும் எழுதி முடிக்கப் பெறாமல் சுவடியில் இருந்த பாடல்.

48. மருத்துவத்திற்காக வந்த ஒரு பெண்ணை மருத்துவம் பார்க்கத் தீண்டுகிறார் மருத்துவர். மருத்துவரின் மனைவிக்குப் பொறுக்கவில்லை நெஞ்சம். நல்ல நகைச்சுவைப் பாட்டு.

49. ‘தலைவனோடு சேர்ந்து விளையாடிய நிகழ்ச்சிகள், பொழுதுகள் எத்தனையோ. அவற்றில் ஒன்று நினைவுக்கு வந்தாலும், அவர் என்னை மறந்திருக்க முடியாதே’ என்று ஏங்குகின்றாள் தலைவி.

50. ‘தமிழ் மொழி தாழ்த்தப்படுகிறது; காதல் செய்ய நேரமில்லை’ என்கிறான் தலைவன். ‘தமிழில் அகத்துறைக்கு விலக்கு இருக்கிறதா’ என்று கேட்கிறாள் தலைவி. அவர்கள் காதல் தமிழ்மொழி நலனுக்காக உதவுகிறது.

51. எதிர்வீட்டுக்குக் குடிவந்த மணமான பெண்ணின் இழிநிலையை விளக்கும் கதை பொதி பாடல் இது. 1977இல் பாவலரேறு ஐயா அவர்கள் ‘மிசா’க் கொடுஞ்சிறையில் இருந்தபோது எழுதப்பெற்றது.

52. இலக்கியங்கள் யாக்கின்றார், தமிழ் சொல்கின்றார் என்று விரும்பித் திருமணம் செய்து கொண்டவர் தம்மைத் துன்புறுத்தும் அல்லல் கண்டு மனம்வருந்தி அவர் மனந்திருந்தி வாழ்வாரோ என வருந்திப் பாடுவதான பாடல்.

53. மொழி, இன, நாட்டுமீட்பு முயற்சிக்குப் போராடிக் கொண்டிருக்கும் வீரனுக்காக ஓங்கி நிற்பவளுக்குத் தன் கொள்கைக்கான செயல் நிறைவேறிய பின்னே மணப்பதாக அவன் கூறுவதாக இப்பாடல் அமைந்திருக்கிறது. ஐயா அவர்கள் 1994-இல் ‘தடா’க் கொடுஞ்சிறைக்குட்பட்டிருந்தபோது, அக்கால் உள்ளிருந்த போராளிகளை மனங்கொண்ட நிலையில் எழுந்ததிப் பாடல்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/20&oldid=1445065" இலிருந்து மீள்விக்கப்பட்டது