பக்கம்:கனிச்சாறு 6.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

உக


67. An expert is one who knows more and more about less and less என்பது ஆங்கிலப் பொன்மொழி. ஒரு சிறு துகளைப் பற்றி எவ்வாறெல்லாம் நினைத்துப் பார்க்க முடியும் என்பதை விளக்குகிறது இப்பாட்டு.

68. குழந்தையின் அழகை அழகுறச் சொல்லும் பாடல்.

69. 1977-இல் தமிழகத்தையும் ஆந்திரத்தையும் அலைக்கழித்த புயலைப் பற்றிய இயற்கை ஓவியமிது. ‘செந்தமிழ்ச் செல்வி’யில் வெளிவந்தது.

–இறைமை–

70. இறுதியில் இவ்வுலகில் என்னென்ன கொள்கைகள் வாழும்; எவையெவை வீழும் என்பது பற்றிய படப்பிடிப்பு இது. மாந்த இனத் தொடக்கத்திலிருந்து படிப்படியாக வரும் மாற்றங்களும் மேலாளுமை செய்யும் கொள்கைகளும் இதில் விரித்துரைக்கப் பெறுகின்றன.

71. உணர்வுக் கனல் இது. வெதும்பலுறும் பாவலரின் மனம் என்ன பாடுபடுகிறது! எத்தகைய கதறல்!

72. ஆசிரியரை இயக்குகிறது இறைமை என்று சொல்கிறது இப்பாட்டு. அவர் என்ன சொல்கிறார்?

73. சொற்களின் பொதுப்படவான பொருள் அல்லாமல் அதன் ஆழ்பொருளை விளக்கும் பாடல்.

74. இறை என்பது எது? உலகம் தோன்றிய நாளிலிருந்து விடுக்கப்படும் வினா. பத்து வெண்பாக்களில் மறுக்க வொண்ணா விடைகள் கூறப்பெறுகின்றன.

75. மெய்யுணர் வில்லாதவர்கட்கு மெய்யுணர்வு கொடுக்கும் பத்து முத்துப்பாடல்கள் இவை.

76. உயர்வான பல பொருள்களையும் படைத்துத் தந்த இறைமை, சிற்சில தீமைகளையும் ஏன் படைத்திடல் வேண்டும் என்று அலமருகிறது நெஞ்சம்.

77. மக்களினச் சிறப்பு இழிவுபடுத்தப் படுகிறது. உலகில் அறியாமையால் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களுக்கு அறிவு கொளுத்துகிறது இப்பாடல்.

78. ஆங்காங்கு நடைபெறும் கூட்டங்களிலும், விழாக்களிலும், பொதுவுணர்வெழுப்ப வேண்டிய பள்ளிகளிலும் தொடக்கத்தே பாடப்பெறும் இறைவணக்கப் பாட்டுப் பொதுவானதாக இல்லை என்ற குறை ஆசிரியரிடம் கூறப் பெற்றதுண்டு. எனவே மாந்த இனத்திற்கே பொதுவானதும், மெய்யுணர்வு ஒன்றே கொளுவப் பெற்றதுமான இப் பாட்டை எழுதினார். பொதுவினார் பயன்படுத்திக் கொள்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/22&oldid=1445069" இலிருந்து மீள்விக்கப்பட்டது