பக்கம்:கனிச்சாறு 6.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


10

ஊர் அறியும் முன் !


வேடிக்கை என்னடி தோழி - உன்றன்
வாடிக்கை விட்டிதைக் கேளடி நாழி!

(வேடிக்கை)


பாடிக்கை யாழ்ஒன்று தூக்கி உளப்
பாங்கினில் யான்காணாப் பேரன்பு தேக்கி,
நாடிக்கை தொட்டெனை நின்றான் - தனை
நம்பென்றான்; நம்பினேன்; நடந்தது பின்றான்!

(வேடிக்கை)


கோடிக்கை யாலென்னைச் சுட்டி - என்றன்
குறைகூறி ஊரினர் யாவரும் திட்டி,
கூடிக்கை கொட்டிடு முன்னம் - மணம்
கூட்டுக, என்றவற் கியம்படி அன்னம்

(வேடிக்கை)


தேடிக்கை கூட்டி என் முன்னே - அத்
தீந்தமிழ்ப் பாணனை நிறுத்துக பொன்னே!
நீடிக்கைப் பொழுதினி வேண்டேன் - இதை
நினைவு கொள்; அன்றேல் உன்
தோழிநான் மாண்டேன்! (வேடிக்கை)

-1952
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/44&oldid=1445092" இலிருந்து மீள்விக்கப்பட்டது