பக்கம்:கனிச்சாறு 6.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 கனிச்சாறு – ஆறாம் தொகுதி

முன்பு முழக்கிய அன்பிலும் மேலதாய்
மூட்டி யுவந்தவள்,மொய்குழல் தாழ்ந்திட
தன்புது மலர்முகம் தோளில் சார்த்தியென்
தாடையை நீவி நகர்ந்தவள், இன்றிலை 4

ஒளிநில வுமிழ்ந்திடும் மாடத் தொருநாள்
உவகைக் கதைகள் பற்பல பேசி, அக்
கிளியொடு கழித்த இறுதி நாளதும்
கனவென் றாகிய தையகோ! வானின்,
வெளியொடு கலந்தனள்! கலந்தனள் காற்றொடு!
வீசிச் சுருளும் அலையென மாய்ந்தனள்!
ஒளியிலை! இல்லையென் உயிர்க்கோ ருறுதுணை!
உலகு மாய்ந்தது! சூழ்ந்தது துன்பமே! 5

-1952
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/48&oldid=1445097" இலிருந்து மீள்விக்கப்பட்டது