பக்கம்:கனிச்சாறு 6.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 கனிச்சாறு – ஆறாம் தொகுதி

என்றவனின் கால்விழுந்து கண்ணீராற் கழுவி
“எத்திறத்தாள் தமிழ்க்கன்னி? என்னைவிட மேலோ?
நின்றெனக்குக் கூறுங்கள்” என்றேனா தோழி,
நீடுயர்ந்த தோளுயர்த்தி, விழியுருட்டி நோக்கிக்
“குன்றனைத்த புகழுடையாள், கோடிச்சிறப் புடையாள்;
கூறுபத்துப் பாட்டுப்பதி னெண்கணக்கு நூற்கள்,
பொன்றாத எண் தொகையின்
இன்பமவள்; அறத்தாள்;
போதுமோடி அன்னவளின் புக”ழென்றான் தோழி!

புகழ்ந்தவனின் உளம் பொங்கப்
புதுப்பாடல் மழையாய்ப்
பொழிந்தவனைக் கேட்டறிந்தேன்;
பூரித்துப் போனேன்,
திகழ்ந்தஅழ கொளியும்அவன் கூர்த்தறிவுத் திறனும்,
திரள்தோளும் மறநெஞ்சும் தமிழர் களை அற்றை
இகழ்ந்தவட வரசர்களை இழுத்துவந்த சேரன்
ஏந்தலைப்போல் இருந்ததடி! என்னென்று சொல்வேன்!
புகழ்ந்தவனை வணங்கியென்றன்
துயர் நெஞ்சை மீட்டுப்
‘பொன்றாத தமிழோடுன் புகழ்வாழ்’கென் றேனே.

-1952
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/50&oldid=1445099" இலிருந்து மீள்விக்கப்பட்டது