பக்கம்:கனிச்சாறு 6.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  27


பெருந் தோள் தழுவிக் கிடப்பேன்; அவனென்
சிறுந் தோள் தடவிக் கிடப்பான்; இரவு
பறந் தோ டிப்போம்! விடிந்ததும் என்னை
மறந் தோ டிப்போய்க் கடலுட் புகுந்தவன் (காணேன்)

பெருங் காற்றடிக்கும்; பேரலை எழும்பும்;
கரும்பேர் வானம் மின்னும் இடிக்கும்;
வருகை பார்த்திருப் பேன்பல நாட்கள்;
வருவான் தோழி! இன்றோ சென்றவன் இன்னும் (காணேன்)

கடலுட் பிறந்து கடல்விளை யாடி
நடவைப் பருவத் தின்மர மேறி
உடலைப் பழக்கி, ஒண்டொடி என்னை
மடலெனத் தழுவிய அடலோ றிளைஞனைக் (காணேன்)

கூடிச் சென்றவர் குடிலினை நோக்கிப்
பாடித் திரும்பிய வாறுளர்! அவனைத்
தேடித் துடித்திடும் தீய... என்ப
“ஏடித் தேம்புவதேன்!” என்றே தேற்றிக் (காணேன்)

-1952 (?)
 

17

முன்னும் பின்னும்!

பெருநீர் வடித்தழுத பேதையினைத் தேற்ற
வருவீர் எனக்கூட்டி வந்தேன் - பெருகுநீர்
விட்டழுதாள் மீண்டும் வருகைக்குப் பின்னென்னை
விட்டுச் செல்வார்தோழி என்று!

-1952 (?)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/53&oldid=1445104" இலிருந்து மீள்விக்கப்பட்டது