பக்கம்:கனிச்சாறு 6.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


நின்றதையும், உங்கள் நினைவெல்லாம் என்னுளத்தை
வென்றதையும் என் சொல்வேன்? எவ்வாறு விண்டுரைப்பேன்!
பொங்குகின்ற நல்லுணர்வில் பூத்த ஒரு மலரே!
அங்கிங் கெணாது டலம் அத்தனையும் ஆட்கொள்ளும்

வாய்மைக் குலக் கொழுந்தே! வாழ்ந்துவிட்டேன்! வாழ்ந்துவிட்டேன்!
சேய்மைத் தனியுருவே! சிக்குண்ட நல்லன்பே!
அன்புருவே வாழ்க! அறநெஞ்சே நீ வாழ்க!
இன்புறுவோம் என்றும் இணைந்து!

-1955 (?)




33

இறந்தாள் நினைவு!




என்னைப்பே ரன்போடு தூக்கி நிறுத்தி என்
இதழ்தனில் முத்தந் தந்த
ஈரிதழ் ஒரு மலர்வாய் நேற்றிருந் ததுகாணின்
றில்லை யிதை யாங்கன் சொல்வேன்?

அன்னைக்கு நிகரான அன்போடும் பரிவோடும்
அணைத்த யிரு மலர்க்கை யில்லை?
அலையலையாய்க் கூந்தற் குளிர்த் தலையின் றில்லை?அதன்
அடி தொடு மலர் அடியின் றில்லை?

மின்னைச்சிற் றிடைகாட்ட மேனிப் பொன் னொளி காட்டும்
மாமயிலின் நடையின் றில்லை?
மானுக்கு நிகர் விழியுந் தேனுக்கு நிகர் மொழியும்
மாமதியை யொத்த முகமும்

தின்னக் கொடுக்கின்ற துவர் வாயின் மலரிதழும்
தோன்றுமோ? களி யூன்றுமோ?
தோகையிரு விழிமூடி என்கவிதை மாந்துமொரு
திருநாளை காணு வேனோ?

-1955 (?)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/72&oldid=1445136" இலிருந்து மீள்விக்கப்பட்டது