பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137

ஆர்ப்பரிக்க; சிலம்பினம்‌ புலம்ப—காலிலே அணிந்த சிலம்பும்‌. மணிகளும்‌ ‘கலீர்‌ கலீர்‌’ என்று ஒலிக்க; எங்கும்‌—எங்கும்‌; பொம்‌ என—கூட்டம்‌ கூட்டமாக; புகுந்து—ஒருவரை ஒருவர்‌ முட்டிப்‌ புகுந்து; மொய்த்தார்‌—இராமனைக்‌ க௱ண நெருங்கினர்‌.

𝑥𝑥𝑥𝑥


விரிந்து வீழ்‌ கூந்தல்‌ பாரார்‌
      மேகலை அற்ற நோக்கார்‌
சரித்த பூந்துகில்கள்‌ தாங்கார்‌
      இடை தடுமாறத்‌ தாழார்‌
நெருங்கினர்‌ நெருங்கிப்‌ புக்கு
      நீங்குமின்‌ நீங்குமின்‌ என்று என்று
அருங்கலம்‌ அனைய மாதர்‌
      தேனுகர்‌ அளியின்‌ மொய்த்தார்‌.

தெருவிலே தேர்மீது அமர்ந்து வருகிறான்‌ என்ற செய்தி கேட்டார்கள்‌ பெண்கள்‌, அவ்வளவுதான்‌. ஓடோடி வந்தார்கள்‌, அப்படி ஓடி வந்த வேகத்தில்‌ கூந்தல்‌ அவிழ்ந்து விட்டது, ஆடை குலைந்து சரிந்து விட்டது. மேகலாபரணங்கள்‌ அறுந்து சிதைந்து விட்டன, இவற்றைச்‌ சிறிதும்‌ பொருட்படுத்தினார்‌ அல்லர்‌. ‘விலகுங்கள்‌ விலகுங்கள்‌’ என்று சொல்லி ஒருவரை ஒருவர்‌ முட்டித்‌ தள்ளிக்கொண்டு வந்து தேரைச்‌ சூழ்ந்து கொண்டனர்‌, அது எப்படியிருந்தது. தேன்‌ அருந்தும்‌ பொருட்டு வண்டுகள்‌ ‘பொம்‌’ என மொய்ப்பனபோல்‌ இருந்ததாம்‌.

𝑥𝑥𝑥𝑥

அரும்‌ கலம்‌ அனைய மாதர்‌—அருமையான அணிகலன்கள்‌ போன்ற பெண்கள்‌ ; (பரபரப்பினால்‌) விரிந்து

18