பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

ஆகிய திருமாலும் போல; மன்னுதி—நிலை பெற்று வாழ்வாயாக! என்னா – என்று கூறி, குளிர் நல் நீர் – குளிர்ந்த நல்ல நீரரல் தாரை வார்த்து; தாமரை அன்ன—தாமரை போன்ற தடக்கையின் ஈந்தான் — அந்த ராமனது பெரிய வலது கைவில் கொடுத்தான்.

𝑥𝑥𝑥𝑥

ங்குனி உத்திரம் ஆன
        பகல் போது
அங்கண் இருக்கினில்
        ஆயிரம் நாமச்
சிங்கம் மணத் தொழில்
        செய்த திறத்தால்
மங்கல அங்கி
        வசிட்டன் வளர்த்தான்.

பங்குனி மாதத்திலே உத்திர நட்சத்திரம் கூடிய நல்ல நாளிலே இராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடைபெற்றது. ஆயிரம் பெயர் கொண்ட திருமாலின் அம்சமாகிய இராமன் திருமணம் செய்து கொண்டதற்கு ஏற்ற முறையில் வேத விதிப்படி வசிட்ட முனிவர் மங்கல ஓமம் செய்தார்.

𝑥𝑥𝑥𝑥

பங்குனி உத்தரம் ஆன பகல் போது – பங்குனி மாதத்து உத்தர நட்சத்திரம் கூடிய நன்னாளில்; அங்கண்—அவ்விடத்தில்; ஆயிரம் நாமச் சிங்கம் — ஆயிரம் பெயர் கொண்ட சிங்கம் போன்ற இராமன்; மணத் தொழில் செய்த திறத்தால் – திருமண வைபவம் செய்த முறைக்கு ஏற்ப; வசிட்டன்—வசிட்ட முனிவன்; மங்கல அங்கி வளர்த்தான் – மங்கலகரமான ஓமத் தீ வளர்த்தாள்.

𝑥𝑥𝑥𝑥